அமீரக செய்திகள்

அமீரகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி!! RTA, குளோபல் வில்லேஜ் இணையதளங்களில் ஆயிரக்கணக்கான திர்ஹம்களை பறிகொடுத்த குடியிருப்பாளர்கள் புகார்!!

துபாயில் சமீபகாலமாக குடியிருப்பாளர்களை குறிவைத்து பல்வேறு ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போலியான RTA, குளோபல் வில்லேஜ் இணையதளங்களால் ஆயிரக்கணக்கான திர்ஹம்களை இழந்திருப்பதாக துபாய்வாசிகள் புகாரளித்துள்ளனர்.

உதாரணமாக, நோல் கார்டுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக கூகுளில் ‘Nol recharge’ என்று தேடும் போது, உங்கள் திரையில் தோன்றும் முதல் நான்கு தளங்கள் அனைத்தும் மோசடியானவை என்று கூறப்படுகிறது.

துபாயில் வசிக்கும் முகமது சல்மான் என்பவர் அந்த போலியான இணையதளத்தில் தனது நோல் கார்டை 30 திர்ஹம்களுடன் ரீசார்ஜ் செய்ய முயற்சித்தபோது, ​​1,051 திர்ஹம்ஸை பறிகொடுத்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து மனம் திறந்த சல்மான், அந்த தளம் RTA இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் போலவே இருந்ததாகவும், சந்தேகிக்கும்படியாக அதில் தவறாக எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தளத்தை கிளிக் செய்தால், நோல் டேக் ஐடி, மின்னஞ்சல் முகவரி மற்றும் ரீசார்ஜ் தொகை ஆகியவற்றை கோரும் பக்கத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும் என்றும், விவரங்களை உள்ளிட்டதும் கட்டணத்தை உறுதிப்படுத்த அடுத்த படிக்கு அழைத்துச் செல்லும் என்றும் விவரித்தார்.

அதுமட்டுமில்லாமல், சல்மானின் டெபிட் கார்டில் இருந்து 30 திர்ஹம்ஸ்க்கு பதிலாக 1,051 திர்ஹம்ஸ் கழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். RTA மட்டுமின்றி குளோபல் வில்லேஜ் மற்றும் மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் இணையதளங்களும் போலியான டிக்கெட்டுகளை விற்க மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

சுற்றுலாப்பயணி ஒருவர் https://cargovanexpeditinginny.com/ என்ற தளத்தில் மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் டிக்கெட்டை வாங்கும் போது, சுமார் 6,000 திர்ஹம் ரொக்கத்தை இழந்ததாகப் புகாரளித்துள்ளார். இந்த தளம் இப்போது Google ஆல் ‘Dangerous’ எனக் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நபர், குளோபல் வில்லேஜுக்கான 22 திர்ஹம் டிக்கெட்டை ஒரு போலியான தளத்தில் முன்பதிவு செய்ய முற்பட்டபோது, ​​1000 திர்ஹம்ஸை இழந்துள்ளார். இதுபோல ஏராளமானோர் போலியான தளங்கள் குறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CREDO இன் நிறுவனர் மற்றும் CTO ஒபைதுல்லா காஸ்மி அவர்கள், அதிகரித்து வரும் மோசடி தளங்களைச் சுட்டிக்காட்டி, பயனர்கள் எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை வழங்குவதற்கு முன், இணையதளங்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஃபிஷிங் தளங்களை அங்கீகரிப்பது என்பதில்  URL களில் உள்ள முரண்பாடுகளைச் சரிபார்ப்பது (அமீரக அரசாங்க இணையதளங்கள் பொதுவாக ‘.ae’ டொமைனைப் பயன்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிடுவது), மோசமான இலக்கணத்தைக் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பான இணைப்புகளை (HTTPS பயன்படுத்தும் தளங்களுடன்) உறுதி செய்வது ஆகியவை அடங்கும்.

அதேசமயம், நிறுவனங்களின் பிராண்ட் மற்றும் வாடிக்கையாளர் தளத்தைப் பாதுகாப்பதில் நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பையும் காஸ்மி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் 2023 இன் முதல் மூன்று காலாண்டுகளில் மட்டும் 71 மில்லியன் சம்பவங்களுக்கு எதிராக போராடி வருகிறது என்று சைபர் செக்யூரிட்டி கவுன்சிலின் தலைவரான டாக்டர் முகமது அல் குவைதி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ‘Smishing Triad’ என்று அழைக்கப்படும் ஒரு ஹேக்கிங் குழு, புதிய உரை அடிப்படையிலான ஃபிஷிங் பிரச்சாரத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருட முயற்சித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, அபராதம் செலுத்துதல் அல்லது ஒரு முறை கடவுச்சொற்களைப் (OTP) பகிர்வது போன்ற அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு எதிராகவும் இந்த மோசடி குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் தொடர்ந்து குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!