அமீரக செய்திகள்

துபாயில் நோல் கார்டுக்கான குறைந்தபட்ச டாப்-அப் தொகையில் மாற்றம்.. ஜனவரி 15 முதல் அமல்..!!

துபாயில் மெட்ரோ, பேருந்துகள், டிராம்கள் மற்றும் வாட்டர் பஸ்கள் என எந்தப் போக்குவரத்து சேவைகளில் பயணித்தாலும் பணம் செலுத்த நோல் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நோல் கார்டில் குறைந்தபட்ச பேலன்ஸ் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதாவது, மெட்ரோ டிரான்சிட் நெட்வொர்க்கில் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பயணிகள் தங்கள் நோல் கார்டில் 15 திர்ஹம்ஸ் இருப்பு வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில், எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நோல் கார்டுக்கான குறைந்தபட்ச டாப்-அப் தொகையை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக RTA வெளியிட்ட X பதிவில், ஜனவரி 15 முதல், நோல் கார்டுக்கான குறைந்தபட்ச டாப்-அப் 20 திர்ஹம்களாக இருக்கும் என்று கூறியுள்ளது. தற்சமயம், நோல் கார்டுகள் குறைந்தபட்சம் 5 திர்ஹம்களுக்கு டாப்-அப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் பொதுப் போக்குவரத்தில் மட்டுமின்றி, டாக்ஸி கட்டணம், பார்க்கிங், துபாய் பொது பூங்காக்கள், எதிஹாட் அருங்காட்சியகம் மற்றும் நகரைச் சுற்றியுள்ள 2,000 க்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் மற்றும் கடைகளுக்குச் செலுத்தவும் நோல் கார்டைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் எமிரேட் முழுவதும் உள்ள RTA டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், சோலார் டாப்-அப் மெஷின்கள் மூலமாகவும், நோல் பே ஆப்ஸ் வழியாகவும் உங்கள் நோல் கார்டுகளை டாப் அப் செய்யலாம். அதுமட்டுமில்லாமல், RTA ஆல் கொண்டுவரப்பட்ட நோல் பிளஸ் விருப்பமும் உள்ளது. இந்த நோல் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் கட்டணம் செலுத்தும் போது வெகுமதி புள்ளிகளும் சிறப்பு சலுகைகளும் பெறலாம்.

இந்த புள்ளிகளைப் பயன்படுத்தி உங்கள் நோல் கார்டை ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட உணவகங்களில் ஷாப்பிங் செய்யும்போது அல்லது சாப்பிடும்போது தள்ளுபடிகளைப் பெறலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!