அமீரக செய்திகள்

UAE: தியேட்டரில் திரைப்படத்தை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது சட்டவிரோதம்..!! மீறுபவர்களுக்கு 100,000 திர்ஹம் வரை அபராதம் மற்றும் 2 மாத சிறை தண்டனை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திரையரங்குகளில் திரைப்படத்தின் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது கடுமையான அபராதம் மற்றும் சிறைத் தண்டனைக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அமீரகத்தில் உள்ள திரையரங்குகளில் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று திரைப்படம் தொடங்கும் முன் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சிலர் இது போன்ற நடத்தைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் பதிப்புரிமைச் சட்டங்களை (copyright law) மீறுவதாகக் கருதப்படுகிறது.

அமீரக அரசாங்கமானது கடந்த 2021 ஆம் ஆண்டில், பதிப்புரிமை மற்றும் அண்டை உரிமைகள் தொடர்பான புதிய ஃபெடரல் சட்ட எண். 38 ஐ வெளியிட்டது, இது ஜனவரி 2022 இல் நடைமுறைக்கு வந்தது.

பதிப்புரிமை மீறலைப் பொறுத்தவரை, அமீரக சட்டத்தின் எண். 38 இன் 39, 40 மற்றும் 41 ஆகிய விதிகள் அபராதம், சிறைத்தண்டனை மற்றும் மீறும் நகல்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் அழித்தல், அத்துடன் பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும் செயல்கள் போன்றவற்றுக்கான தண்டனைகளை நிறுவுவதாக அப்பர்கேஸ் லீகல் அட்வைசரியின் நிர்வாகப் பங்குதாரர் அலெக்சாண்டர் குகுவேவ் தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டில் காப்புரிமைதாரர்களின் அனுமதியின்றி, திரையரங்கில் திரைப்படத்தைப் பார்க்கும் போது திரைப்படக் காட்சியைப் படமாக்குவது அல்லது புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமானதாகும். மேலும், மீறுபவர்கள் மீது 100,000 திர்ஹம் வரை அபராதம் மற்றும்/அல்லது இரண்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் சட்டப்பிரிவை சுட்டிக் காட்டியுள்ளார்.

அமீரகத்தின் பதிப்புரிமைச் சட்டம், இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளைப் பாதுகாப்பதற்கான பெர்ன் கன்வென்ஷன் (Berne Convention) உட்பட சர்வதேச ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த கன்வென்ஷனில் ஐக்கிய அரபு அமீரகம் 2004 இல் உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் திரையரங்குகளில் நுழைவதற்கு வயது வரம்பு இருப்பதாகவும் அதன்படி, அமீரக திரையரங்குகள் வாடிக்கையாளர்களின் வயதுச் சான்று மற்றும் அடையாள ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!