அமீரக செய்திகள்

அமீரகத்தில் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைகள்.. ‘கோல்டன் ஹார்ட்’ முன்முயற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஐக்கிய அரபு அமீரகத்தில் லுலு குழுமத்தின் (lulu group) தலைவர் யூசுஃப் அலி அவர்கள் ஐம்பது ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பிறவி இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கு உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தொண்டு முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட புர்ஜீல் ஹோல்டிங்ஸின் (Burjeel) நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஷம்ஷீர் வயலில் அவர்களால், கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

அதாவது, உலகளவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான யூசுஃப் அலி, முதன்முதலாக டிசம்பர் 31, 1973 அன்று துபாய்க்கு வந்தடைந்தார். ஆரம்பத்தில் பின்தங்கிய நிலையிலிருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து, லுலு எனும் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி இன்று மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

அந்த வகையில், லுலு குரூப் இன்டர்நேஷனல் தலைவரான யூசுப் அலியின் வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில், இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் தொண்டு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவரது மருமகனும், VPS ஹெல்த்கேர் குழுமத்தின் நிறுவனருமான டாக்டர் ஷம்ஷீர் வயலில் புத்தாண்டு தினமான திங்கட்கிழமையன்று இலவச அறுவை சிகிச்சை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிறவி இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, உதவி தேவைப்படுபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான ஆவணங்களில் குழந்தையின் மருத்துவ அறிக்கை மற்றும் தொடர்பு விவரங்களும் அடங்கும்.

அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட புர்ஜீல் ஹோல்டிங்ஸ் கீழ், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் இந்தியாவில் உள்ள டாக்டர் ஷம்ஷீரின் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!