அமீரக செய்திகள்

துபாய்: கடந்த ஆண்டு மட்டும் 21 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ஸ்மார்ட் கேட் பயன்படுத்தியதாக தகவல்..!!! GDRFA வெளியிட்ட புள்ளிவிபரம்….

கடந்த 2023 ஆம் ஆண்டில் துபாய் ஏர்போர்ட்ஸில் 21 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை ஸ்மார்ட் கேட் மூலம் சில நிமிடங்களில் கடந்து சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் கடந்து சென்ற 13.5 மில்லியன் பயணிகளுடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் அதிகமாகும்.

துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) வெளியிட்ட தகவல்களின் படி, இந்த பயணிகள் துபாய் இன்டர்நேஷனல் (DXB) மற்றும் அல் மக்தூம் இன்டர்நேஷனல் (DWC) ஆகியவற்றில் 127 ஸ்மார்ட் கேட்கள் வழியாக குடிவரவு அதிகாரிகளின் எந்த உதவியும் இல்லாமல் கடந்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு DXBயின் டெர்மினல் 3 இல் ஐந்து ஸ்மார்ட் கேட்கள் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் முக அங்கீகார அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் செய்ய வேண்டியது எல்லாம் ஸ்மார்ட் கேட்களின் மீது உள்ள பச்சை விளக்கை பார்க்க வேண்டும். இது பயணிகள் தங்களின் ஆவணங்களை எடுத்துச் செல்லாமல் சில நொடிகளில் நடைமுறைகளை முடிக்க அனுமதிக்கிறது.

அதேபோல், concourse B, டெர்மினல் 3 இல் உள்ள எமிரேட்ஸ் பயணிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் கேட்களில் முக அங்கீகாரம் மூலம் செக்-இன் செய்யலாம், இமிக்ரேஷன் செயல்முறையை முடிக்கலாம் மற்றும் தங்கள் விமானங்களில் ஏறலாம்.

இந்த ஸ்மார்ட் கேட்கள் மற்றும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகள் முகம் மற்றும் கருவிழி அங்கீகாரம் போன்ற சமீபத்திய பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. GDRFA படி, இந்த ஸ்மார்ட் கேட்கள் விமான நிலையங்களில் செலவிடும் நேரத்தை குறைக்க உதவுகின்றன.

துபாய் விமான நிலைய டெர்மினல்களில் உள்ள மற்ற ஸ்மார்ட் கேட்களும் மேம்படுத்தப்பட்டவை என்றாலும், வருகை மற்றும் புறப்படும் பயணிகள் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியினை ஸ்கேன் செய்யும் நடைமுறையை முடிக்க வேண்டும்.

விமான நிலைய பாஸ்போர்ட் விவகாரத் துறையின் (Airport Passport Affairs) உதவிப் பொது இயக்குநர் பிரிகேடியர்-ஜெனரல் தலால் அல் ஷாங்கிட்டி என்பவர் கூறுகையில், இ-கேட்கள் முதன்முதலில் துபாயில் 2002 இல் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், 2017 இல் ஸ்மார்ட் கேட்களாக மேம்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு, கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​அதிகாரிகள் இந்த நடைமுறையை தொடர்பு இல்லாதவையாக (contactless) மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!