ADVERTISEMENT

அமீரகத்தில் நேற்று உணரப்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டராக பதிவு!!

Published: 9 Jan 2024, 11:10 AM |
Updated: 9 Jan 2024, 11:10 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) இரவு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அமீரகத்தில் இருக்கக்கூடிய மசாஃபியில் இரவு 11.01 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) X தளத்தில் பதிவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) நிலநடுக்கவியல் துறையின் இயக்குனர் கலீஃபா அல் எப்ரி என்பவர் பேசுகையில், நாடு குறைந்த முதல் மிதமான நில அதிர்வுக்குள்ளாகி இருப்பதால், மக்களிடையே எந்த கவலையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு வருடத்தில் இரண்டு முதல் மூன்று வரை அடிக்கடி நடுக்கம் ஏற்படுவதாகவும், இந்த அதிர்வுகள் மக்களால் உணரப்படவில்லை, ஆனால் அவை சென்சார்கள் மூலம் கண்டறியப்படுவதாகவும் தெரிவித்த அல் எப்ரி, இந்த நடுக்கம் அனைத்தும் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்பை பாதிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

அவர் தொடர்ந்து பேசுகையில், நாடு அரேபிய டெக்டோனிக் பிளேட்டில் அமைந்துள்ளதாகவும், அது யூரேசிய தட்டுக்கு எதிராகத் தள்ளுவதாகவும் கூறினார். எனவே, நாடு சில சமயங்களில் எந்த விளைவும் இல்லாமல் நடுக்கத்தை அனுபவிக்கிறது என்பதையும் விவரித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT