அமீரக செய்திகள்

ஒரு மணி நேரத்தில் அதிக உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் என்ற உலக சாதனையை படைத்துள்ள அமீரகம்..!!!

ஐக்கிய அரபு அமீரகம் உறுப்பு தானம் செய்வதில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் உறுப்பு தானம் பதிவுசெய்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

மேலும், 4,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் புதன்கிழமையன்று, ஹயாத் திட்டத்திற்கு பதிவு செய்துள்ளனர்.

ஹயாத் என்பது (அரபு மொழியில் வாழ்க்கை என்று பொருள்) மனித உறுப்புகள் மற்றும் திசுக்களின் தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய திட்டமாகும், இது அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தால் (MoHAP) கடந்த செப்டம்பர் 2020 இல் தொடங்கப்பட்டது.

ஆன்லைன் ஹயாத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஹயாத்தில் பதிவு செய்த பல்வேறு தேசங்களைச் சேர்ந்த 21,357 அமீரக குடியிருப்பாளர்கள் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, 4,010 நன்கொடையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர், மேலும் புதன்கிழமை பிற்பகல் 3 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 25,367 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகம் ஆன்லைன் நன்கொடையாளர் பதிவுக்கான புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

 

இது குறித்து ஹயாத் தலைவர் டாக்டர் அலி அப்துல்கரீம் அல் ஒபைத்லி பேசுகையில், ஹயாத் என்பது அனைவருக்கும் ஒரு திட்டம். நீங்கள் அனைவரிடமும், குறிப்பாக உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்கறை காட்டுவது சமூகத்தில் உள்ள ஒற்றுமையின் அடையாளமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், நன்கொடையாளர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும், அவர்கள் இறக்கும் போது நன்கொடையாளர்களாக மாறுவதற்கும் ஹயாத் ஒரு கூறுகளைக் கொண்டுள்ளதாகவும், . பதிவு செய்தவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே நன்கொடையாளர்களாக மாறுவார்கள், ஆனால் ஹயாத்துக்கு கையொப்பமிடுவது நேர்மறையான கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் பரப்புவதற்கான ஒரு அறிகுறி என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!