அமீரக செய்திகள்

UAE: ஏர்போர்ட் to ஏர்போர்ட் விசா மாற்றத்திற்கான கட்டணம் 20 சதவீதம் வரை அதிகரிப்பு.. டிராவல் நிறுவன உரிமையாளர்கள் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான நிலையத்திலிருந்து மற்றொரு விமான நிலையத்திற்கு பயணித்து, விசா நிலை மாற்ற சேவையைப் பயன்படுத்தி தங்களின் விசாவை நீட்டிப்பதற்கான கட்டணம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அமீரகத்தில் இயங்கி வரும் பயணத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பார்வையாளர்கள் வெளியே சென்று திரும்பும் விமான நிறுவனத்தின் விமானக் கட்டணத்தில் ஏறக்குறைய 125 திர்ஹம்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரான மாதங்களில் நாட்டில் தங்குவதற்கு விரும்பும் பார்வையாளர்களின் விகிதம் அதிகரித்திருப்பது இத்தகைய விலை அதிகரிப்புக்கான மற்றொரு காரணி என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஏர்போர்ட் to ஏர்போர்ட் விசா மாற்றம்:

விமான நிலையத்திலிருந்து வேறு விமான நிலையத்திற்கு சென்று விசா மாற்றம் செய்து கொள்ளும் நடைமுறையானது, விசிட் அல்லது டூரிஸ்ட் விசாவில் வந்த பார்வையாளர்கள் விசாவை மாற்றிக்கொள்ள தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு பதிலாக அருகிலுள்ள நாட்டிற்குச் சென்று புதிய சுற்றுலா விசாவைப் பெற அனுமதிக்கிறது.

மேலும் இந்த நடைமுறையின் மூலம் பார்வையாளர்கள் அதே நாளில் விசா மாற்றத்தைப் பெறலாம் அல்லது அதிகபட்சம் ஒரு நாள் இடைவெளிக்குள் விசாவை பெற்றுக் கொண்டு மறுநாளே அமீரகம் திரும்பலாம். பொதுவாக ஒரே நாள் செயல்முறைக்கு சுமார் நான்கு மணிநேரம் தேவைப்படும், இதில் விமானத்தில் பயணிப்பது, அண்டை நாட்டின் விமான நிலையத்தில் காத்திருப்பது மற்றும் பின்னர் விமானத்தில் அமீரகம் திரும்புவது ஆகியவையும் அடங்கும்.

தற்போதைய கட்டணம்:

சுற்றுலா நிறுவனங்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 90 நாள் விசா ரத்து செய்யப்பட்டது. இது பார்வையாளர்களிடையே 60 நாள் விசாக்களுக்கான தேவையை அதிகரித்தது. இதன் விளைவாக 1,300 திர்ஹம்களில் தொடங்கக் கூடிய 60 நாள் விசாவின் விலை இப்போது 1,500 இல் தொடங்குவதாக டிராவல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, பயணிகள் முன்பதிவு செய்வதைப் பொறுத்து விலை மாறுபடும் என்றும், ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தால் விலை மலிவாக இருக்கும் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 2022 இல், விசிட் விசா வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் தங்குவதற்கான அனுமதியை நீட்டிப்பதற்கான விருப்பத்தை அமீரக அரசு நிறுத்தி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. அமீரகத்தைப் பொறுத்த வரை விசிட் விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறி புதிய விசாவில் நுழைவது கட்டாயமாகும். எனினும், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மனிதாபிமான அடிப்படையில் இந்த தேவைகளை அமீரக அரசு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, விமானம் மூலம் 30 நாள் விசா மாற்றத்திற்கான விலையும் 1,200 திர்ஹம்ஸிலிருந்து 1,300 திர்ஹம்ஸாக (தொடக்க விலைகள்) அதிகரித்துள்ளதாகவும் தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!