ADVERTISEMENT

UAE: சாலை நடுவே ஆபத்தான முறையில் இ-ஸ்கூட்டர்களை இயக்கும் நபர்கள்..!! எச்சரிக்கை விடுத்த ஆணையம்..

Published: 4 Feb 2024, 8:41 PM |
Updated: 4 Feb 2024, 8:45 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் குறித்து அவ்வப்போது அதிகாரிகள் நினைவூட்டலை வழங்கி வருகின்றனர். இருப்பினும், சில குடியிருப்பாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கவனக்குறைவாக சவாரி செய்வதால் சாலை விபத்து ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், அபுதாபி காவல்துறை அமீரக சாலைகளில் நியமிக்கப்படாத இடங்களில் இ-ஸ்கூட்டரை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளைக் காட்டும் வீடியோ ஒன்றினை அதன் சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளது.

குறிப்பாக, சாலைகளில் தேவையான பாதுகாப்பு கியர் இல்லாமல் ஆண்கள் இ-ஸ்கூட்டர்களை ஓட்டுவதைக் காட்டும் வீடியோவையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. வீடியோவில், வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடிக்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், இ-ஸ்கூட்டர்களில் ரைடு செய்பவர்கள் ஹெல்மெட் மற்றும் முழங்கால்கள் மற்றும் முழங்கைகளுக்கு பாதுகாப்பான்களைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel