ADVERTISEMENT

அமீரக ரெசிடென்ஸி விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்களா…?? இனி உங்கள் இன்சூரன்ஸ் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம்..!!!

Published: 17 Feb 2024, 5:47 PM |
Updated: 17 Feb 2024, 5:47 PM |
Posted By: Menaka

அமீரக ரெசிடென்ஸி விசாக்களை பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் பிப்ரவரி 19 திங்கட்கிழமை முதல் ஹெல்த் இன்சூரன்ஸ் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றலாம் என்றும் இனி ஆவணங்களை கைமுறையாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியானது (ICP), அங்கீகாரம் பெற்ற சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் காப்பீட்டுக் கொள்கைகள் ஒருங்கிணைந்த தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைனில் பகிரப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ICP இயக்குநர் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி பேசுகையில், இந்த செயல்முறை பாதுகாப்பான இணைப்பு மூலம் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த  டிஜிட்டல் செயல்முறை விசா விண்ணப்பம் மற்றும் புதுப்பிப்பதற்கான நேரத்தை குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel