அமீரக செய்திகள்

துபாய் போலீஸ் செயலி: கனமழையில் கார் சேதமடைந்து விட்டதா?? ஆன்லைனில் ‘To Whom It May Concern’ சான்றிதழைப் பெறுவது எப்படி???

துபாயில் கடந்த சில தினங்களில் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. பொதுவாக, இதுபோன்ற இயற்கை பேரிடர்களில் வாகனங்கள் சேதமடைந்தால் குடியிருப்பாளர்கள் ‘To Whom It May Concern’ என்கிற சான்றிதழைப் பெற தங்கள் கார்களை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

இந்த சான்றிதழுக்கான விண்ணப்பம் துபாய் போலீஸ் செயலி மற்றும் இணையதளத்தில் உள்ளது என்றாலும், வாகனத்தின் சேதத்தை சரிபார்க்க வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஆய்வுக்காக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும்.

ஆனால், இப்போது குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமின்றி சேதமடைந்த வாகனத்தின் புகைப்படத்தை ஆன்லைனில் அனுப்புவதன் மூலமாகவும் சான்றிதழைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திங்களன்று துபாய் காவல்துறையின் நிர்வாக விவகாரங்களுக்கான பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் மன்சூர் அல் கர்கௌய் கூறுகையில், இன்று, தானியங்கி சேவை வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை, விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியிருப்பாளர்கள் துபாய் போலீஸ் இணையதளத்தில் சான்றிதழ் தொகுப்பு சேவைக்கு விண்ணப்பித்து, இயற்கை பேரிடர்களுக்கான சேவையான ‘To Whom It May Concern’ என்பதை தேர்வு செய்து சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும். அதன்பிறகு, ஒன்று முதல் இரண்டு வேலை நாட்களுக்குள் 95 திர்ஹம் கட்டணத்தில் ஆன்லைனில் சான்றிதழைப் பெறலாம் என்று விண்ணப்ப செயல்முறையை விவரித்துள்ளார்.

மேலும், அபுதாபி குடியிருப்பாளர்கள் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் போக்குவரத்து துறைகளுக்குச் சென்று, தங்கள் வாகனங்களின் மழை சேதத்தைப் புகாரளிக்கலாம் மற்றும் சான்றிதழ்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!