ADVERTISEMENT

எமிராட்டிசேஷன் விதிகளை மீறிய மேனேஜர்.. 100,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த நீதிமன்றம்! அரசாங்கம் வழங்கிய ஆதரவு தொகையை திருப்பித் தருமாறும் ஆணை…

Published: 19 Feb 2024, 9:22 PM |
Updated: 19 Feb 2024, 9:22 PM |
Posted By: Menaka

துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் மேலாளர், நஃபிஸ் திட்டத்தின் எமிராட்டிசேஷன் இலக்கை எட்டுவதற்காக மோசடி செய்ததால் நீதிமன்றம் அவருக்கு 100,000 திர்ஹம் அபராதம் விதித்துள்ளது.

ADVERTISEMENT

அந்நிறுவனத்தின் மேலாளர் இரண்டு எமிராட்டி பெண்களை தற்காலிகமாக பணியமர்த்தியதாகவும், இரண்டு வேலை அனுமதிகளை அதன் விநியோகத்திற்காக அல்லாமல் வேறு ஒரு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டிய துபாய் பப்ளிக் பிராசிகியூஷன், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்த நிறுவனம் நஃபிஸ் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 திர்ஹம் மாத ஆதரவைப் பெறும் நோக்கில் போலி ஒப்பந்தங்களைப் பயன்படுத்தியதும், எமிராட்டி பெண்கள் நான்கு மாதங்கள் மட்டுமே அந்நிறுவனத்தில் பணிபுரிந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மோசடி செய்த மேலாளருக்கு 100,000 திர்ஹம்ஸும், நான்கு மாதங்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் அரசாங்க ஆதரவுத் தொகையைப் பெற்ற இரண்டு ஊழியர்களும் 20,000 திர்ஹம் தொகையைத் திருப்பித் தருமாறும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) நடத்திய ஆய்வில், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து நாட்டில் சுமார் 1,077 தனியார் நிறுவனங்கள் போலியான எமிராட்டிசேஷன் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MoHRE-இன் எமிராட்டிசேஷன் இலக்குகளை அடைவதற்காக சட்டவிரோதமாக எமிராட்டிகளை பணியமர்த்தி விதிகளை மீறியதாக நிரூபிக்கப்பட்ட 1,818 குடிமக்களை பணியமர்த்திய இந்த நிறுவனங்களுக்கு ஆணையத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு நிறுவனம் அதன் எமிராட்டிசேஷன் இலக்குகளைப் பூர்த்தி செய்ய உண்மையான பணியின்றி பெயரளவு வேலையில் அமீரக நாட்டவரைப் பணியமர்த்தியது என்று  உறுதிசெய்யப்படும்போது மற்றும்/அல்லது அதே நிறுவனத்தில் எமிராட்டியர் ஒருவர் மீண்டும் பணியமர்த்தப்படும்போது எமிராட்டிசேஷன் தொடர்புடைய பலன்களிலிருந்து தரவு மற்றும் பலன்களைத் தவிர்க்கும் போது எமிராட்டிசேஷன் போலியாகக் கருதப்படுகிறது.

அபராதம்:

எமிராட்டிசேஷன் விதிகளை மீறும் நிறுவனத்தின் ஒவ்வொரு விதிமீறலுக்கும் 20,000 முதல் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிமீறலின் தீவிரத்தைப் பொறுத்து வழக்கு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படும். குடியிருப்பாளர்கள் எமிராட்டிசேஷன் தொடர்பான ஏதேனும் மீறல்கள் இருந்தால் MoHRE கால் சென்டர் மூலம் 600590000 என்ற எண்ணிலோ அல்லது அமைச்சகத்தின் ஸ்மார்ட் செயலி மூலமாகவோ புகாரளிக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel