ADVERTISEMENT

துபாய்: பயணியின் இ-ஸ்கூட்டரில் திடீரென ஏற்பட்ட புகை.. மெட்ரோ ஸ்டேஷனில் தாமதம்.. பயணிகளுக்கு பேருந்து சேவை வழங்கிய RTA!!

Published: 14 Feb 2024, 12:15 PM |
Updated: 14 Feb 2024, 12:17 PM |
Posted By: Menaka

துபாய் மெட்ரோவில் இன்று (புதன்கிழமை) பயணிகளில் ஒருவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீரென புகைபிடித்ததால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஆன்பாஸிவ் ஸ்டேஷனில் நிற்காமல் மெட்ரோ இயங்கி வந்துள்ளது. இதனால் அந்த மெட்ரோ ஸ்டேஷனில் தாமதம் ஏற்படும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டு அந்த ஸ்டேஷனில் பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT

இது குறித்து, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவில், நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மெட்ரோவின் ரெட் லைனில் பயணித்த கொலம்பிய நபரான நயிபே, தான் ஆன்பாஸிவ் மெட்ரோ நிலையத்தில் இறங்கத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மெட்ரோ அங்கு நிறுத்தாமல் சென்றதால் அனைத்து பயணிகளும் குழப்பமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பிசினஸ் பே-இல் இறங்கி கரீம் மூலம் ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்து பயணித்தததாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சமீபகாலமாக, இ-ஸ்கூட்டர்கள் அமீரகவாசிகள் மத்தியில் பிரபலமாகிவிட்டன. அதிகளவு மக்கள் இ-ஸ்கூட்டர்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதற்கிடையில், தரமற்ற இ-ஸ்கூட்டர்கள் மற்றும் எளிதில் கிடைக்கும் ஆன்லைன் சார்ஜர்களைப் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இ-ஸ்கூட்டர்கள் லித்தியம்-அயன் பேட்டரிகளில் இயங்குகின்றன, அவை எளிதில் வெப்பமடையக்கூடியவை என்பதால், சேதமடைந்த அல்லது குறைபாடுள்ளதாக உற்பத்தி செய்யப்படும் போது தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல், இ-ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து வெடித்துச் சிதறிய சில நிகழ்வுகளும் உள்ளன. எனவே இதனை பயன்படுத்தும் நபர்கள் முறையான பாதுகாப்போடு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள்:

  • நீங்கள் வெளியே இருக்கும்போதோ அல்லது தூங்கும்போதோ இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டாம்.
  • ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கும் தரமற்ற ஸ்கூட்டர் மற்றும் சார்ஜர்களை வாங்க வேண்டாம்.
  • மலிவான மற்றும் நாக்-ஆஃப் மாற்று லித்தியம் பேட்டரிகளை (knock-off replacement lithium batteries) வாங்க வேண்டாம். தரமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்கவும்
  • உங்கள் பேட்டரி செயலிழந்து தீ அபாயமாக மாறக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனியுங்கள்
  • உங்கள் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் இடத்தில் ஸ்மோக் அலாரங்களை நிறுவவும்
  • உங்கள் பேட்டரிக்கு சரியான சார்ஜரைப் பயன்படுத்தவும்
  • பேட்டரி சார்ஜ் ஆனதும் உங்கள் சார்ஜரை அவிழ்த்து விடுங்கள்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel