ஃபுஜைராவில் அதிகாலை முதலே கனமழை: மலையில் இருந்து அருவிகள் போல் மழைநீர் விழும் காட்சிகளைப் பகிர்ந்த குடியிருப்பாளர்கள்….

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளை இடியுடன் கூடிய பலத்த மழை, ஆலங்கட்டி மழை தாக்கி வருவதால், ஆங்காங்கே சாலைகளில் வெள்ளப்பெருக்கு, வாடிகளில் நிரம்பி வழியும் நீர், பள்ளத்தாக்குளில் தேங்கும் நீர் என மழையின் தாக்கங்களை குடியிருப்பாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
View this post on Instagram
மேலும், நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), பகல் நேரத்தில் சில வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது. அத்துடன், ஷார்ஜா எமிரேட்டில் உள்ள கோர் ஃபக்கான், கல்பா மற்றும் புஜைராவில் உள்ள சர்வதேச விமான நிலையம், அல் ஹாய், மாய் ஆகிய இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
அதன்படி, இன்று (செவ்வாய்கிழமை) ஃபுஜைராவில் வசிப்பவர்கள் பலத்த மழையின் இரைச்சலுடன் காலைப்பொழுதைத் தொடங்கியுள்ளனர். அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கத் தொடங்கியதால் மலைகளில் அருவிகள் விழுவதையும் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்துள்ளனர். கனமழை காரணமாக பார்வைத்திறன் (visibility) குறைந்ததால் மலைப்பாதையில் செல்வது சவாலாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையிலேயே கனமழை எமிரேட்டை மூழ்கடித்ததால், குடியிருப்பாளர்கள் செவ்வாய்கிழமை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர், இது அவர்களுக்கு சிறிது நிம்மதியை அளித்திருக்கும். அனைத்து அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களும் தொலைதூரப் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், பணியிடத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய பணியாளர்களுக்கு தொலைதூர வேலை விருப்பத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஃபுஜைராவில் உள்ள உள்ளூர் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவும் பிப்ரவரி 13 செவ்வாய் அன்று எமிரேட்டில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொலைதூர வகுப்புகளைத் தொடருமாறு அறிவித்துள்ளது.
View this post on Instagram
ஃபுஜைரா மட்டுமின்றி, நாடு முழுவதும் மழையின் காரணமாக, பிப்ரவரி 13 ஆம் தேதி நெகிழ்வான பணிகளைத் தொடருமாறு தனியார் துறை நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. துபாயிலும் இன்று அரசு ஊழியர்கள் தொலைதூர வேலையை மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel