ADVERTISEMENT

அமீரகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் பெய்த கனமழை!! மழை தொடரும் என NCM தகவல்….

Published: 29 Feb 2024, 11:55 AM |
Updated: 29 Feb 2024, 11:55 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் நேற்றிரவு (பிப்ரவரி 28) இடிமின்னலுடன் தொடங்கிய கனமழை இன்று (பிப்ரவரி 29) அதிகாலை வரை இடைவிடாமல் வெளுத்து வாங்கியுள்ளது. இதன் விளைவாக ஆங்காங்கே உள்ள பள்ளத்தாக்குகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் புஜைராவின் சில பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

இதனிடையே, அபுதாபி காவல்துறை அல்அய்னுக்கு ஆலங்கட்டி மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, அமீரகத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு (NCEMA) நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றவும், குறிப்பாக கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் பகுதிகளில் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்:

NCM வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், வெப்பச்சலன மேகங்கள் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் மழையை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, இன்று (வியாழன்) 12.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சில இடங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில நேரங்களில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும், கடலில் காற்று வலுப்பெறும் என்பதால், தூசி மற்றும் மணலுடன் கூடிய காற்றினால் சாலையில் கிடைமட்டத் தெரிவுநிலை குறையும் வாய்ப்புள்ளதாக குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நிறமிடப்பட்டு காட்டப்பட்டுள்ள பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் இதனால் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலைகள் முறையே 23ºC மற்றும் 24ºC வரை பதிவாகும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

இருப்பினும், அபுதாபியில் 16ºC ஆகவும், துபாயில் 17ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 10ºC ஆகவும் வெப்பநிலை குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஈரப்பதத்தின் அளவு அபுதாபியில் 40 முதல் 80 சதவீதம் வரையிலும், துபாயில் 40 முதல் 75 சதவீதம் வரையிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel