அமீரக செய்திகள்

துபாய்: மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மெட்ரோ நுழைவாயில் தற்காலிகமாக மூடப்படுவதாக RTA அறிவிப்பு…!!

துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் வணிக வளாகத்திற்கான மெட்ரோ நுழைவாயில் இந்த வாரம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலின் மெட்ரோ நுழைவாயிலுக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், பிப்ரவரி 21, 2024 புதன்கிழமை காலை 8.30 மணி முதல் தற்காலிகமாக வணிக வளாகத்திற்கான அணுகல் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், “பயிற்சி நேரத்தில் (drill time) யாரும் மாலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள், இருப்பினும், இந்த நேரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் வழி சாதாரணமாக செயல்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்” என்று அறிவித்துள்ளது.

அன்றைய தினம் மால் முழுவதும் சிவில் பாதுகாப்புப் (Civil Defence) பிரிவினரால் வெளியேற்றும் பயிற்சி (evacuation exercise) நடத்தப்படுவதால், அணுகல் தடை செய்யப்பட்டுள்ளது. மால் நுழைவாயிலில் இருந்து மெட்ரோ என்ட்ரி மற்றும் எக்ஸிட் ஆகிய இரண்டு அணுகலும் மறு அறிவிப்பு வரும் வரை குறிப்பிடப்பட்ட நேரத்தில் இருந்து கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மெட்ரோ செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்பதை MoE நிலையத்தின் தகவல் மேசையில் உள்ள ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, மாலுக்கான அணுகல் மட்டுமே மூடப்படும். ஆகவே, பயணிகள் இன்னும் மற்ற நுழைவாயில்களில் இருந்து நிலையத்திற்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் நடைபாதை நுழைவாயில் மற்றும் அதற்கு செல்லும் லிப்ட் மூலமாக அணுகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!