அமீரகத்தில் பெய்யவிருக்கும் கன மழை..!! முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாக NCEMA தகவல்….
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் ஏற்ற இறக்கமான வானிலைக்கு மத்தியில் தொடர் கூட்டங்களை நடத்திய தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), குளிர்காலத்தில் பெய்து வரும் மழையின் தாக்கத்தை சமாளிக்க நாடு தயாராக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் இந்த வார தொடக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் வரை இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மாறிவரும் வானிலையை எதிர்கொள்ள ஆலோசனைகளை வெளியிட்ட NCEMA, அதிக மழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், நீர் வழித்தடங்கள், வெள்ளம் ஏற்படும் பாதைகள் மற்றும் நீர் நிலப்பரப்புகளைத் தவிர்க்கவும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக, வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும், துல்லியமான தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்பும்படியும் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, ராஸ் அல் கைமா காவல்துறையும் சீரற்ற காலநிலையின் போது வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, சாலையில் பார்வையை அதிகரிக்க வைப்பர்கள் நன்றாக வேலை செய்வதை உறுதி செய்யவும், குறைந்த பீம் ஹெட்லைட்களைப் பயன்படுத்துமாறு ஓட்டுநர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பள்ளமான பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும், வாகனத்தின் பிரேக்கைப் பரிசோதிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel