ADVERTISEMENT

UAE: அனைத்து சட்டங்களையும் ஆவணப்படுத்த புதிய தளம் அறிமுகம்!! ஷேக் முஹம்மது தலைமை தாங்கிய அமைச்சரவையில் வெளியான அறிவிப்பு!!

Published: 5 Feb 2024, 8:00 PM |
Updated: 5 Feb 2024, 8:43 PM |
Posted By: Menaka

அமீரக அரசாங்கம் நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள், குடிமக்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அதன் சட்டங்களின் தாக்கத்தை மதிப்பாய்வு செய்யும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த மதிப்பாய்வு மூலம், நாட்டின் சட்டங்கள் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் அவற்றை மறுபரிசீலனை செய்வதுமே நோக்கமாகும்.

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு உலகளாவிய நாடு என்றும் அதன் சட்டங்கள் உலகளாவியவை என்றும் கூறிய ஷேக் முஹம்மது, அதன் வெளிப்படைத்தன்மை நன்கு நிறுவப்பட்டுள்ளது மற்றும் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவது ஒரு முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் X இல் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், 1971 இல் நாடு உருவானதிலிருந்து அனைத்து சட்டங்கள், கூட்டாட்சி ஆணைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நிர்வாக முடிவுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்த அமீரகம் ஒரு புதிய தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமீரகத்தின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கியபோது இது வெளியானது. அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கக்கூடிய இந்த தளத்தை பொதுமக்கள் இலவசமாக அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தளத்தில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் நடைமுறையில் உள்ள சட்டங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் மற்றும் தயாரிக்கப்பட்டு வரும் சட்டங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சி மூலம் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைத்து, அமீரகத்தின் சட்ட மற்றும் சட்டமியற்றும் சூழல் உலகிலேயே சிறந்ததாக இருப்பதை உறுதிசெய்வதே குறிக்கோள் என்று ஷேக் முகம்மது எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel