அமீரக செய்திகள்

துபாய்: விரைவில் வரவிருக்கும் ரமலான்.. பல்வேறு பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடியை அறிவித்துள்ள விற்பனை நிறுவனம்..!!!

அமீரகத்தில் விரைவில் வரவிருக்கும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு துபாயை தளமாகக் கொண்ட சில்லறை விற்பனையாளரான யூனியன் கூப் (Union Coop) அதன் பல்வேறு தயாரிப்பு பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய யூனியன் கூப்பின் CEO முஹம்மது அல் ஹஷேமி, 4,000 பொருட்களுக்கு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி உட்பட 11 பல்வேறு ப்ரொமோஷன்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அதன் Tamayaz அட்டைதாரர்களுக்கு சில தயாரிப்புகளில் கூடுதல் தள்ளுபடியும் இருக்கும். இது தற்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தமயாஸ் அட்டைதாரர்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 10 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள தள்ளுபடிகள் வழங்கப்பட்டதாகக் கூறிய யூனியன் கூப்பின் தலைமை நிர்வாகி, இந்த ஆண்டு தொகையானது கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறை (IACAD) வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் மார்ச் 12, 2024 செவ்வாய்க்கிழமை தொடங்கும். மேலும் ஈத் அல் பித்ர் ஏப்ரல் 10, 2024 அன்று குறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சில்லறை விற்பனையாளர் மார்ச் 8 முதல், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குபவர்களுக்கு நோல் கார்டு, அலிபே மற்றும் வீசாட் (WeChat) ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள நுகர்வோருக்கு உதவும் வகையில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டில் மளிகைப் பொருட்களின் விலைகள் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!