ADVERTISEMENT

புதுப்பொலிவுடன் மிளிரும் துபாய் வாட்டர் கேனல்.. சீரமைப்புப் பணிகள் முடிந்ததாக RTA தகவல்..!!

Published: 22 Feb 2024, 9:14 PM |
Updated: 22 Feb 2024, 9:18 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஷேக் சையத் சாலையில் உள்ள வாட்டர் கேனல் ப்ரிட்ஜின் ஃபவுண்டைனின் விரிவான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், தற்பொழுது அது முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த பரமாரிப்புத் திட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

மேலும், முதல் கட்ட பராமரிப்புப் பணிகள் 600 வேலை நேரத்தைத் தாண்டியதாகவும், அத்துடன் ஃபவுண்டைனில் உள்ள வெளிப்புற அலுமினியத்தை அகற்றி மீண்டும் நிறுவுவதும் மறுசீரமைப்புப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, புதுப்பித்தல் பணியானது, மேம்பட்ட நிலைத்தன்மைக்காக முந்தைய துருப்பிடிக்காத-ஸ்டீல் நீர் குழாய்களை பாலிஎதிலீன் குழாய்களுடன் மாற்றுவது மற்றும் ஃபவுண்டைனின் காலாவதியான துருப்பிடிக்காத எஃகு கட்டமைப்பை புதியதாக மாற்றுவது போன்றவற்றை உள்ளடக்கியது என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, பராமரிப்பு கட்டத்தில் மேம்பட்ட அணுகல் மற்றும் இயக்கம் மற்றும் அனைத்து தனிநபர்களின் ஆன்-சைட் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு மிதக்கும் தளம்  நிறுவப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் வாட்டர் கேனல் ஃபவுண்டைனின் விரிவான இந்த மறுசீரமைப்பு, அதன் வசதிகளைப் பராமரிப்பதற்கும், அதன் நிலைத்தன்மையை அதிகரிப்பதற்கும், அதன் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் RTA இன் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.

நீர்வீழ்ச்சியின் பராமரிப்பு செயல்முறை பின்வரும் ஐந்து கால கட்டங்களைக் கொண்டுள்ளது: தினசரி, மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு மற்றும் வருடாந்திர பராமரிப்பு.

 

ஒளியேற்றப்பட்ட ஃபவுண்டைனானது RTA இன் புதுமையான மற்றும் துபாய் வாட்டர் கேனலுக்கு கூடுதல் அழகியல் காட்சியை சேர்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், பல்வேறு சமூகப் பிரிவினரின் மையப்புள்ளியாகவும் கருதப்படும் இந்த வாட்டர் கேனல் ப்ரிட்ஜுக்கு அடியில் படகுகள் செல்லும் போது ஃபவுண்டைனில் செயல்படும் மோஷன் சென்சார் மூலம் தானாகவே ஃபவுண்டைன் நின்றுவிடுவது இதிலுள்ள சிறப்பம்சமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel