ADVERTISEMENT

அமீரக வங்கியில் லோன் பெறுவது எப்படி..?? வெளிநாட்டவர்களுக்கான தகுதி வரம்புகள் என்ன..??

Published: 26 Feb 2024, 1:02 PM |
Updated: 26 Feb 2024, 2:47 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க வங்கிகளில் லோன் வாங்குவது பற்றி யோசிக்கிறீர்களா? அமீரகத்தில் உள்ள வங்கிகள் மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து எடுக்கக்கூடிய இணை விண்ணப்பதாரர் திட்டங்கள் (co-applicant programs) வரை லோன் வாங்குவதற்கு எண்ணற்ற விருப்பங்களை வழங்குகின்றன.

ADVERTISEMENT

இன்னும் பல நிறுவனங்கள் லோன் வாங்க விரும்புவோருக்கு விரைவான ஆன்லைன் விருப்பங்களையும் வழங்குகின்றன. அமீரக சென்ட்ரல் வங்கியின்படி, தனிநபர் கடன்கள் (personal loan) என்று வரும்போது, ​​தனிநபர்கள் தங்களின் சம்பளம் மற்றும் என்ட் ஆஃப் சர்வீஸ் கிராஜுட்டி (end of service gratuity) அல்லது நன்கு வரையறுக்கப்பட்ட மூலத்திலிருந்து (well defined source) பெறுகின்ற வழக்கமான வருமானம் (regular income) ஆகியவற்றால் லோனுக்கு விண்ணப்பிக்கலாம்.

அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் தனிநபர் லோனைப் பெறுவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிக்கான அளவுகோல்கள் முதல் வங்கிகள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான விதிகள் வரை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

வங்கியில் லோன் பெறுவதற்கான வரம்புகள்:

வயது: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில், விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், மேலும் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 60 முதல் 65 வயது ஆகும். இருப்பினும், சில வங்கிகளில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் லோனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படலாம்.

குறைந்தபட்ச வருமானம்: நீங்கள் லோன் பெறும் வங்கியைப் பொறுத்து தனிநபரின் குறைந்தபட்ச வருமானம் 5,000 திர்ஹம்ஸ் -8,000 திர்ஹம்ஸ்க்கு இடையில் இருக்கும்.

ADVERTISEMENT

பணி விபரம்: விண்ணப்பதாரர்கள் வங்கியில் வேலைக்கான சான்றிதழைக் காட்ட வேண்டும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பளத்துடன் குறைந்தது 6 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்: விண்ணப்பதாரர் வாங்கிய லோன்கள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அவர்களின் பரிமாற்றங்களை (credit history) சரிபார்க்கவும் வங்கிகளுக்கு கடன் அறிக்கை (credit report) தேவைப்படுகிறது. ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது, கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை குறிப்பதாகும் .

தேவையான ஆவணங்கள்

  • எமிரேட்ஸ் ஐடியின் நகல்
  • பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்
  • வங்கி/நிதி நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து 3-6 மாதங்களில் இருந்து வங்கி அறிக்கை
  • சம்பள பரிமாற்ற சான்றிதழ்

கடனாளிகள் மற்றும் வங்கிகளுக்கான விதிமுறைகள்:

  1. அமீரக சென்ட்ரல் வங்கியின்படி, தனிநபர் கடன்கள் (personal loan) கடனாளியின் சம்பளத்தின் மதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது. மேலும், கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த வரம்பை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  2. வங்கியில் கடன் பெற்றவர்கள் 48 மாதங்களுக்குள் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். மாதாந்திர தொகையானது கடன் பெற்றவரின் மாத சம்பளத்தில் பாதிக்கு மேல் இருக்கக்கூடாது.
  3. சில வங்கிகள் தங்கள் கொள்கைகள் மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்து 5 மில்லியன் திர்ஹம்ஸ் வரை கடன்களை வழங்கலாம்.
  4. ஒரு கடன் அல்லது வங்கியில் திருப்பிச் செலுத்தும் காலமானது ஓய்வு பெறும் வயது வரை நீட்டிக்கப்பட்டால், வருமானம் அல்லது சம்பளத்தில் 30 சதவிகிதம் மட்டுமே கழிக்கப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
  5. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடமிருந்து கடனின் மதிப்பு அல்லது டெபிட் இருப்பில் 120 சதவீதத்திற்கும் அதிகமான காசோலைகளை (post-date cheques) எடுக்க கூடாது.
  6. அமீரகத்தில் உள்ள வங்கிகள் வருடாந்திர அடிப்படையில் கடன் இருப்பு குறைவதைப் பொறுத்து கடனுக்கான வட்டி விகிதத்தைக் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel