அமீரக செய்திகள்

நிறுவனம் உங்களின் வருடாந்திர விடுப்பு சம்பளத்தை வழங்கவில்லையா?? பயன்படுத்தாத வருடாந்திர விடுப்புக்கான உரிமை பற்றி UAE தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வேலையை விட்டு வெளியேறும்போது அமீரக தொழிலாளர் சட்டத்தின்படி, கிராஜுட்டி (gratuity) மட்டுமின்றி பயன்படுத்தப்படாத வருடாந்திர விடுப்புக்கு ஊதியம் பெறுவது உட்பட பல இறுதிச் சேவைப் பலன்களையும் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா??

ஒருவேளை நிறுவனம் உங்களின் வருடாந்திர விடுப்பு சம்பளத்தை வழங்கவில்லை என்றால், உங்களுக்கான உரிமை மற்றும் உரிமை கோரல் பற்றி அமீரக தொழிலாளர் சட்டம் என்ன கூறுகிறது என்பதைப் பின்வருமாறு விளக்கமாகப் பார்க்கலாம்.

அமீரக தொழிலாளர் சட்டம் – 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் கட்டுரை 29 இன் படி, ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு. பொதுவாக, வருடாந்திர விடுப்பு சம்பளத்தில் ஊழியருக்கான உரிமையில் பின்வருவன அடங்கும்:

  • நிறுவனத்தில் பணிபுரியும் போது ஒவ்வொரு வருடத்திற்கும் முப்பது நாட்கள் விடுப்பு.
  • முழுமையான வருடாந்திர விடுப்பு நிலுவையைப் பெறுவதற்கு முன் வேலை முடிவடையும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட நாட்களுக்காக கணக்கிடப்படும் ப்ரோ-ரேட்டா லீவுகள் (pro rata leave).
  • நாட்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், வேலையை விட்டு வெளியேறும் போது பயன்படுத்தப்படாத வருடாந்திர விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு (payment). இது அடிப்படை ஊதியத்தின் (basic wage) அடிப்படையில் கணக்கிடப்படும்.

இந்த உரிமைகளின் அடிப்படையில், ஒவ்வொரு ஊழியரும் வேலையை விட்டு வெளியேறும் போது பயன்படுத்தப்படாத வருடாந்திர விடுமுறை நாட்களுக்கான ரொக்கத் தொகையை பெறுவதற்கு உரிமை உண்டு.

மேலும், நடைமுறைப்படுத்தும் விதிமுறைகளின் பிரிவு 19 இல், ஊழியர் தனது சேவையின் முடிவில் அவரது அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்பட்டு, சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டிய வருடாந்திர விடுப்புகளின் நிலுவைக்கான ரொக்க உதவித்தொகையைப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஊழியர் தனது வேலையின் கடைசிப் பகுதிக்கான வருடாந்திர விடுமுறையைப் பெறவில்லை அல்லது இழப்பீடு பெறவில்லை என்றால், அவர் அதற்கான ரொக்கத் தொகையைப் பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என்று தொழிலாளர் சட்டம் கூறுகிறது. இருப்பினும், எந்தவொரு உரிமைகோரல்களும் உங்களுக்கு உரிமையுள்ள தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுரை 54(7) இன் படி, எந்தவொரு வேலைவாய்ப்பு உரிமைகள் தொடர்பான எந்தவொரு சட்டப்பூர்வ உரிமைகோரலும் உரிமை பெற்ற நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும். அத்துடன், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!