ADVERTISEMENT

அபுதாபியின் அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு.. வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.. காலிப்பணியிடங்களை அறிவித்த ஆணையம்..!!

Published: 30 Mar 2024, 6:11 PM |
Updated: 31 Mar 2024, 2:22 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா.? அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையமானது (Abu Dhabi Civil Defence Authority) எமிரேட்டின் ஆம்புலன்ஸ் சேவைகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை அமர்த்தவிருப்பதால் வெளிநாட்டவர்கள் உட்பட அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

அவ்வாறு நீங்கள் அபுதாபியில் அரசாங்கத் துறையில் பணிபுரிய விரும்புகிறீர்கள் மற்றும் அந்த வேலைக்குத் தேவையான மருத்துவ தகுதிகளை பூர்த்தி செய்திருக்கிறீர்கள் என்றால், இந்த சிறந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்தி, உடனடியாக உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் (medical supervisor), அவசர மருத்துவர் (emergency physician), அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (emergency medical technician) மற்றும் தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் (infection control specialist) போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்கூறிய பணிகளுக்கு தேவையான தகுதிகள், வழிமுறைகள் மற்றும் உங்கள் CVகளை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் போன்ற முழுவிபரங்களையும் இங்கே கீழே காணலாம்.

ADVERTISEMENT

EMTS – அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (Emergency medical technician)

  • அட்வான்ஸ் கேர் பாராமெடிக் (Advance Care Paramedic): – அவசர மருத்துவ சேவைகளில் இளங்கலை பட்டம் (Bachelor’s degree in Emergency Medical Services)
  • EMT-இன்டர்மீடியேட்: – அவசர மருத்துவ சேவைகளில் டிப்ளமோ (Diploma in Emergency Medical Services).
  • EMT – பேஸிக்: – நர்சிங்கில் இளங்கலை பட்டம் மற்றும் அவசர மருத்துவ சேவைகளில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் (Internationally Recognized Certificate in Emergency Medical Services) அபுதாபி சுகாதாரத் துறையின் செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ மேற்பார்வையாளர் (Medical Supervisor)

அவசர மருத்துவ சேவைகளில் இளங்கலை பட்டம் (Bachelor’s degree in Emergency Medical Services) மற்றும் அட்வான்ஸ் கேர் பாராமெடிக்கிற்காக செல்லுபடியாகும் DOH உரிமம் வைத்திருக்க வேண்டும்.

பயிற்றுவிப்பாளர் படிப்புகள் (Instructor Courses):

  • அட்வான்ஸ் கார்டியாக் லைஃப் சப்போர்ட் (Advance Cardiac Life Support).
  • குழந்தை மருத்துவ அட்வான்ஸ் லைஃப் சப்போர்ட் (Pediatric Advance Life Support)
  • சர்வதேச ட்ராமா லைஃப் சப்போர்ட் A (International Trauma Life Support A)
  • 2 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் இருக்க வேண்டும்

தொற்று கட்டுப்பாட்டு நிபுணர்

– தொற்று கட்டுப்பாட்டில் முதுகலைப் பட்டம்

அவசர மருத்துவர் (Emergency Physician)

  • மருத்துவ நிபுணருக்காக அரபு வாரியம் அல்லது பிற நாடுகளால் வழங்கப்பட்ட வாரியச் சான்றிதழ்.
  • DOH இலிருந்து செல்லுபடியாகும் லைசென்ஸ்.
  • கள அனுபவம் (2 ஆண்டுகள்)

வேலை தேடுபவர்கள் தங்கள் CV களை ems. recruitment@adcda.gov ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் மேற்கண்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel