ADVERTISEMENT

துபாய்: ரமலானை முன்னிட்டு 95% வரை பொருட்களுக்கு தள்ளுபடி..!! 3 நாட்கள் நடைபெறும் ‘கிரேட் ஆன்லைன் சேல்’….

Published: 25 Mar 2024, 7:09 PM |
Updated: 25 Mar 2024, 7:14 PM |
Posted By: Menaka

ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிறுவனங்களிலும், மால்களிலும் ஏராளமான தயாரிப்புகளுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்திருப்பதால், குடியிருப்பாளர்கள் ஷாப்பிங் செய்ய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

இப்படியான சூழலில், துபாய் அதன் சிறந்த ஆன்லைன் விற்பனையின் (great online sale) இரண்டாவது பதிப்பிற்கான தேதிகளை அறிவித்துள்ளது. துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெய்ல் எஸ்டாப்லிஷ்மென்ட் (DFRE) ஏற்பாடு செய்துள்ள இந்த விற்பனை வரும் மார்ச் 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஷாப்பிங் செய்பவர்கள் இந்த சிறப்பு விற்பனையில் பங்கேற்கும் ஆன்லைன் சில்லறை வர்த்தக பிராண்டுகளின் இணையதளங்களில் 95 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று நாள் விற்பனை நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், ஆபரணங்கள், நகைகள், கடிகாரங்கள், வீடு, உடல்நலம், அழகு மற்றும் குழந்தைகளின் பிராண்டுகளில் சலுகைகளை வழங்குவார்கள் என்றும், அதை www.greatonlinesale.comwww.greatonlinesale.com இல் பதிவு செய்வதன் மூலம் அணுகலாம் என்றும் DFRE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவற்றில் Less, Eros, Moms Store, Noon.com, Sharaf DG, Styli மற்றும் 6thstreet.com போன்றவற்றுடன் முக்கிய பிராண்ட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இணையதளத்தில் பதிவு செய்பவர்கள் டிராவில் நுழையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும், அதில் மூன்று வெற்றியாளர்கள் தலா 10,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசைப் பெறுவார்கள் என்றும் DFRE வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து DFREயின் CEO அஹ்மத் அல் காஜா கூறியிருப்பதாவது: “2023 ஆம் ஆண்டில் அறிமுகமான சிறந்த ஆன்லைன் விற்பனையின் வெற்றியைத் தொடர்ந்து, துபாயில் ஷாப்பிங் செய்வதற்கான பரபரப்பான காலகட்டங்களில் ஒன்றான ரமலான் மாதத்தில் அதை மீண்டும் இரண்டாவது ஆண்டிற்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சிறந்த சலுகைகள்:

  • வீட்டுப் பொருட்கள்: CB2, Bed Quarter Furniture, Homebox, Pan Home, Otaq Home, The Red Carpet மற்றும் United Furniture
  • ஈத் பொருட்கள், பரிசுகள்: Alfardan Jewellery, Damas, V Perfumes, La Marquise Jewellery, Coral Perfumes, மற்றும் Xpressions
  • ஈத் ஆடைகள்: All Saints, Carters, Hanayen, Maje, Reebok, and Sandro

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel