ADVERTISEMENT

விமான நிலையம் வரும் பயணிகளை சிறப்பு ரமலான் ஸ்டிக்கருடன் வரவேற்கும் துபாய்.. சிம் கார்டும் இலவசம்..!!

Published: 22 Mar 2024, 11:17 AM |
Updated: 22 Mar 2024, 12:14 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) புனித ரமலான் மாதத்தில் தரை, விமானம் மற்றும் கடல் வழியாக எமிரேட்டுக்குள் நுழையும் சுற்றுலாவாசிகளை வரவேற்க புது முயற்சியினை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

துபாய்க்கு வந்திறங்கும் சுற்றுலாவாசிகளின் பாஸ்போர்ட்டில் சிறப்பு #RamadanInDubai லோகோவுடன் முத்திரையிடுவது, அவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை வழங்குவது என ரமலானை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது. இதில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச சிம் கார்டுகள் வழங்கப்படுவது ஏற்கெனவே உள்ள நடைமுறையாகும்.

இவற்றுடன் கூடுதலாக, பிராண்ட் துபாயின் ‘Ramadan Events in Dubai’ என்று பெயரிடப்பட்ட #DubaiDestinations வழிகாட்டியை அணுகுவதற்கான QR குறியீட்டையும் பயணிகள் பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிராண்ட் துபாயால் உருவாக்கப்பட்ட ‘Ramadan Events in Dubai’ வழிகாட்டியில் துபாய் நகரில் ரமலானை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் பல்வேறு இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது என்றும் இது புனித மாதத்தில் பார்வையாளர்கள் தங்குவதை மேம்படுத்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய ரமலான் மரபுகள், பண்டிகைகள் மற்றும் குடும்ப நட்பு நடவடிக்கைகள் உட்பட துபாய் முழுவதும் உள்ள இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் விரிவான பட்டியலை வழங்கும் இந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த வழிகாட்டியை பின்வரும் லிங்க் மூலம் அணுகலாம்: https://dubaidestinations.ae/guides/PDF/Ramadan_Events_in_Dubai.pdf

ADVERTISEMENT

பிராண்ட் துபாய் மூலம் செயல்படுத்தப்படும் இந்த பிரச்சாரம், துபாயில் உள்ள 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முயற்சிகளை ஒன்றிணைத்து, ரமலான் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியை நகரம் முழுவதும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதாகக் கூறப்படுகிறது.

#RamadanInDubai பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்கும் GDRFA இன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக GDRFA துபாயின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல் மரி கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்த முயற்சிகள் பார்வையாளர்களிடையே விருந்தோம்பல் உணர்வை மேம்படுத்துவதற்கும், துபாய்க்கு வருபவர்களுக்கு இதயப்பூர்வமான வரவேற்பை வழங்குவதற்கும் முயல்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், இத்தகைய சமூக முன்முயற்சிகள் துபாயை ஒரு முன்னணி உலகளாவிய சுற்றுலா தலமாக அதன் நிலையை வலுப்படுத்த GDRFA மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel