அமீரக செய்திகள்

அமீரகத்திற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி..!! வெங்காய ஏற்றுமதிக்கான உச்ச வரம்பும் நிர்ணயம்..!!

இந்திய அரசாங்கம் கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் வெங்காய ஏற்றுமதியை மார்ச் 2024 வரை தடை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (Directorate General of Foreign Trade – DGFT) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அமீரகத்திற்கு ஒவ்வொரு காலாண்டிலும் உச்சவரம்பாக 3,600 டன்கள் என்ற வீதம் மொத்தம் 14,400 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தை போலவே, பங்களாதேஷுக்கு 50,000 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா வெங்காய ஏற்றுமதியை மார்ச் 2024 வரை தடை செய்வதாக அறிவித்திருந்தாலும், நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில் வெங்காய ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று DGFT தெரிவித்திருந்தது.

குறிப்பாக, இந்தியாவில் ஆகஸ்ட் மாதம், வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் டிசம்பர் 31, 2023 வரை விநியோகத்தை மேம்படுத்தவும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு ஒரு டன்னுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) 800 டாலர் என்று மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டது.

அதேசமயம், இந்தியா, பெங்களூரு ரோஸ் வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளித்தது, அதன் படி, ஏற்றுமதி செய்யப்படும் பெங்களூர் ரோஸ் வெங்காயத்தின் பொருள் மற்றும் அளவை சான்றளித்து, கர்நாடகா அரசு தோட்டக்கலை ஆணையரின் சான்றிதழை ஏற்றுமதியாளர் அளித்தால், ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.

பெங்களூர் ரோஸ் வெங்காயம் என்பது கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் ஒரு வகை வெங்காயம் ஆகும், இது 2015 இல் இந்த புவிசார் குறியீட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த 3 மாதங்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் தனது பஃபர் ஸ்டாக்கில் (Buffer stock) இருந்து முக்கிய காய்கறிகளை விடுவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2023-24 சீசனில் சுமார் 300,000 டன் வெங்காயத்தை பஃபர் ஸ்டாக்கில் பத்திரமாக பராமரிக்க இந்தியா முன்பு முடிவு செய்திருந்தது.

முன்னதாக, 2022-23 ஆம் ஆண்டில், அரசாங்கம் 251,000 டன் வெங்காயத்தை கையிருப்பாக பராமரித்தது குறிப்பிடத்தக்கது. சப்ளை சீசனில் விகிதங்கள் கணிசமாக உயர்ந்தால், வெங்காய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பஃபர் ஸ்டாக்கில் குறிப்பிட்ட அளவு வெங்காயம் பராமரிக்கப்படுகிறது.

குறிப்பாக, ஏப்ரல்-ஜூன் மாதங்களில் அறுவடை செய்யப்படும் ரபி வெங்காயம் (rabi onion), இந்தியாவின் மொத்த  வெங்காய உற்பத்தியில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்றும் பயிர் அறுவடை செய்யப்படும் அக்டோபர்-நவம்பர் மாதங்கள் வரை நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!