ADVERTISEMENT

பிக் டிக்கெட்டில் வென்ற இந்தியர்.. நண்பர்களுடன் வாங்கிய டிக்கெட்டுக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு!!

Published: 5 Mar 2024, 4:29 PM |
Updated: 5 Mar 2024, 4:31 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் மில்லியன் திர்ஹம்ஸை பரிசாக அள்ளித்தரும் அபுதாபி பிக் டிக்கெட்டின் இந்த வார டிராவில், துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த முகமது ஷெரீஃப் என்பவர் 15 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை வென்று அசத்தியுள்ளார்.

ADVERTISEMENT

வார இறுதியில் துபாயின் கராமா மாவட்டத்தில் நண்பர்களுடன் இருந்த போது, பிக் டிக்கெட் தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ரா கால் செய்து அவருக்கு வெற்றிச் செய்தியை பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றதை அறிந்ததும், மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாயின் பிசினஸ் பே பகுதியில் கொள்முதல் அதிகாரியாக (procurement officer) பணிபுரிந்து வரும் ஷெரீஃப், ஒரு வருடத்திற்கும் மேலாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் பிக் டிக்கெட் டிராவிற்கான டிக்கெட்களை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

குறிப்பாக, கடந்த பிப்ரவரி 23ம் தேதி அன்று அவரும் அவரது 19 நண்பர்களும் 186551 எண் கொண்ட டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியதாகவும், அந்த எண்ணே தற்போது அவர்களுக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை தேடித்தந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் அனைவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதாகவும், சிலர் டாக்ஸி ஓட்டுனர்களாகவும், மற்றவர்கள் புளூ காலர் தொழிலாளர்களாகப் பணிபுரிவதாகவும் தெரிவித்த ஷெரீஃப், வெற்றி பெற்ற இந்த ரொக்கப் பரிசை தனது 19 நண்பர்களுடன் பகிரந்துகொள்ள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel