ADVERTISEMENT

UAE: மழைநீரில் அடித்து செல்லப்பட்ட கார் நம்பர் பிளேட்கள்.. ஒரு நாள் மழைக்கே அல்லோலப்படும் ஷார்ஜா..!!

Published: 14 Mar 2024, 9:48 AM |
Updated: 14 Mar 2024, 9:54 AM |
Posted By: Menaka

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையின் தாக்கம் பல்வேறு எமிரேட்களில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வார இறுதியில் தீவிரமடைந்த வானிலையால் ஷார்ஜா உள்ளிட்ட எமிரேட்கள் பலவிதமான விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், ஷார்ஜா முனிசிபாலிட்டியின் பணியாளர்கள் இரவும் பகலும் சாலைகளை சுத்தம் செய்வதிலும், நீரை வெளியேற்றுவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்படி சுத்தம் செய்யும் போது, டஜன் கணக்கான நம்பர் பிளேட்களை மீன்பிடிப்பது போல சாலைகளில் தேங்கிய தண்ணீரில் இருந்து எடுத்து அவற்றை சாலையோரத்தில் வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

எமிரேட்டின் அல் கான் இன்டர்சேஞ்ச் மற்றும் ஜமால் அப்துல் நசீர் ஸ்ட்ரீட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த பிளேட்கள் தேங்கியிருந்த வெள்ளநீரில் வேகமாக கடந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அத்துடன் கடந்த திங்களன்று, பல குடியிருப்பாளர்கள் தங்கள் காணாமல் போன நம்பர் பிளேட்களைத் தேடி சாலையோரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பிளேட்களை சரிபார்த்துக் கொண்டிருந்ததாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

துபாயில், வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் அல்லது பழுதடைந்து வாகனம் ஓட்டினால், வாகன ஓட்டிகளுக்கு 3,000 திர்ஹம் வரை அபராதமும், 23 ப்ளாக் பாயின்ட்களும் விதிக்கப்படும். அதே நேரத்தில் தொலைந்த நம்பர் ப்ளேட், எமிரேட்ஸ் ஐடி, மின்னஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் மற்றும் பிற விவரங்களுடன்  அரபு மொழியில் கடிதத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வாகன ஓட்டிகள் தொலைந்த சான்றிதழை துபாய் போலீஸ் செயலி வழியாக விண்ணப்பிக்கலாம்.

இதற்காக விண்ணப்பதாரர் சேவை மற்றும் அறிவுக் கட்டணங்களுக்காக (service and knowledge fees) 70 திர்ஹம் மற்றும் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பத்தை நேரில் அனுப்பினால் கூடுதலாக 100 திர்ஹம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel