அமீரக செய்திகள்

துபாய் அரசாங்கத்திற்கான புதிய லோகோவை அறிமுகம் செய்த ஷேக் ஹம்தான்..!!

துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, துபாய் அரசாங்கத்திற்கான புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லோகோவை இனி செயல்படுத்துமாறு துபாயின் அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட ஷேக் ஹம்தான், புதிய லோகோவை செயல்படுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் புதிய லோகோவை ஏற்றுக்கொள்வதுடன், தங்கள் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் தனிப்பட்ட லோகோக்களை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஷேக் ஹம்தான் பேசுகையில், புதிய லோகோ எமிரேட்டின் தொலைநோக்கு தலைமை, வளர்ச்சி பயண மாற்றம் மற்றும் நகரின் எதிர்கால பரிணாமத்தை குறிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் அடையாளம் லோகோவிற்கு அப்பாற்பட்டது என்றும், செயல்திறன் மற்றும் சிறந்த கலாச்சாரத்தின் கீழ் சேவை செய்வதற்கும் செயல்படுவதற்கும் அர்ப்பணிப்புள்ள குழுக்களை உள்ளடக்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!