அமீரக செய்திகள்

UAE: ரமலானை முன்னிட்டு அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஹைப்பர் மார்க்கெட்கள்.!! அரிசி, பால் முதல் பல்வேறு பொருட்களுக்கு பிரத்யேகச் சலுகைகள்.!!

துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையால் (Dubai Islamic Affairs and Charitable Activities Department) வெளியிடப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் அமீரகத்தில் வரும் மார்ச் 12, 2024 செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் புனித ரமலான் மாதத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதேபோன்று, நாட்டில் உள்ள சில்லறை விற்பனையாளர்களும் ரமலான் மாதத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் நாட்டில் பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். அந்த வகையில் ‘buy-now-pay-later, பேங்க் கார்டுகள் மூலம் கூடுதல் தள்ளுபடிகள், ரேஃபிள்களில் கார்களை வெல்வது, 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள கிஃப்ட் கார்டுகள் என வரிசையாக பல சலுகைகள் மற்றும் பிரச்சாரங்களை சில்லறை விற்பனையாளர்களும் தொடங்கியுள்ளனர்.

மேலும், தனியார் மற்றும் அரசு ஆதரவு பெற்ற ஹைப்பர் மார்க்கெட் ஆப்பரேட்டர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஒரு மாத காலத்திற்கு ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், அமீரகத்தின் இ-காமர்ஸ் ஜாம்பவான்களான அமேசான் (Amazon) மற்றும் நூன் (Noon) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இவ்வாறு ரமலான் மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பற்றிய அனைத்து விபரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தனியார் ஹைப்பர் மார்க்கெட்கள் வழங்கும் அதிரடி ஷாப்பிங் டீல்!!

ரமலான் மாதத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டை விடவும் விலை குறைவு (Prices Lower Than Last Year) என்கிற பிரச்சாரத்தை கேரிஃபோர் (Carrefour) அறிவித்துள்ளது. இது தினசரி அத்தியாவசிய பொருட்கள், தினசரி உணவு, சமையலறை உபகரணங்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 5,000 பொருட்களின் விலையில் 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

அத்துடன் அரிசி, பால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட 100 அத்தியாவசிய பொருட்கள் கடந்த ஆண்டை விடவும் குறைவான விலையில் கிடைக்கும் என்றும், இந்த தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்காக 50 மில்லியன் திர்ஹம்ஸ் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் கேரிஃபோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 600 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடியுடன் ரமலான் மாத சிறப்பு சலுகைகளை, குடியிருப்பாளர்களுக்காக அமீரகம் முழுவதும் அறிமுகப்படுத்தியிருப்பதாக சஃபீர் ஹைப்பர் மார்க்கெட் (Safeer Hypermarket) நிறுவனமும் கூறியுள்ளது.

இந்த வரிசையில் லுலு குழுமமும் (Lulu Hypermarket), கோழி, புதிய மற்றும் உறைந்த உணவுகள், சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் சமையல் பொருட்கள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களில் 70 சதவீதம் வரையிலான விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் தள்ளுபடிப் பிரச்சாரம்:

மேற்கூறிய தனியார் சில்லறை விற்பனையாளர்களைத் தவிர, அரசாங்க ஆதரவு கூட்டுறவு நிறுவனங்களும் இதேபோன்ற ரமலான் மாதத்திற்கான தள்ளுபடி பிரச்சாரங்களை அறிவித்துள்ளன. அதன் மூலம், ஆயிரக்கணக்கான பொருட்களின் விலைகளை 75 சதவீதம் வரையிலும் குறைத்துள்ளன.

அந்தவகையில், துபாயை தளமாகக் கொண்ட யூனியன் கோ-ஆப் (Union Coop) ரமலான் பண்டிகைக்கு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 4,000 பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. கூடுதலாக, இந்த பிரச்சாரத்தின் போது துபாயில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ரேஃபிள் டிராவில் 14 புதிய கார்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், ஷார்ஜா கூட்டுறவு சங்கமும் (Sharjah Coop) கிட்டத்தட்ட 10,000 பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அவற்றில் 80 சதவீதம் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களாகும். இதற்காக சுமார் 35 மில்லியன் திர்ஹம்களை ஷார்ஜா கூட்டுறவு சங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர, ஒவ்வொரு வாரமும் இரண்டு Suzuki Dzire கார்கள், 5,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 30 பர்னிச்சர் கிஃப்ட் கார்டுகள் மற்றும் 300 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 32 ஷாப்பிங் கிஃப்ட் கார்டுகள் உட்பட கிராண்ட் பரிசுகளும் இந்த பிரச்சாரத்தில் இடம்பெற்றுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனங்களின் சலுகை:

இவற்றுக்கு மத்தியில், இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் நூன், பல்வேறு தயாரிப்புகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு கவர்ச்சியான தள்ளுபடிச் சலுகைகளையும், ஷாப்பிங் டீல்களையும் அறிவித்துள்ளன.

குறிப்பாக, Amazon.ae இல் Amazon Global Store வழியாக Amazon US மற்றும் Amazon UK இலிருந்து சர்வதேச பொருட்களை ரமலான் ஷாப்பிங் டீல் மூலம் ஷாப்பிங் செய்ய முடியும் என்றும், அதே நேரத்தில் இலவச டெலிவரி விருப்பங்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்றும் அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!