ADVERTISEMENT

ஷேக் சையத் மஸ்ஜித்திற்கு திடீரென வந்த அமீரக அதிபர்.. பொதுமக்களுடன் சமமாக அமர்ந்து நோன்பு திறப்பு..!!

Published: 18 Mar 2024, 3:06 PM |
Updated: 18 Mar 2024, 3:10 PM |
Posted By: Menaka

அமீரக தலைவர்கள் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு திடீரென வருகை புரிவதை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அபுதாபியில் உள்ள மசூதியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் அமீரக ஜனாதிபதி கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், ஜனாதிபதி நீதிமன்றத் தலைவருமான மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் திடீரென வருகை புரிந்து பொதுமக்களுடன் ஒன்றாக இணைந்து பங்கேற்றுள்ளனர்.

மேலும், அவர்களுடன் அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அபுதாபி நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் கலீத் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான், அபிவிருத்தி விவகாரங்கள் மற்றும் தியாகிகள் குடும்பங்களுக்கான ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணைத் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் மற்றும் பல ஷேக்குகளும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

யாரும் எதிர்பாராத நேரத்தில் அமீரகத்தின் தலைவர்கள் வருகை புரிந்ததால், மசூதியில் கூடியிருந்த இஸ்லாமியர்கள் திகைப்பில் மரியாதையுடன் எழுந்து நிற்கும் காட்சிகளையும் வெளியான வீடியோக்களில் காணலாம்.

அதைத் தொடர்ந்து, அல் நஹ்யான் அவர்கள், அங்கிருந்தவர்களை தங்களின் 13 மணி நேரம் 33 நிமிடங்கள் கடைபிடிக்கப்பட்ட நோன்பை முடித்துக் கொண்டு இஃப்தார் விருந்தைத் தொடங்குமாறு சைகை செய்துள்ளார். மேலும், கூட்டத்தினரை கனிவான குரலில் நலம் விசாரித்துள்ளார்.

ADVERTISEMENT

கூட்டத்தினர் மத்தியில் இஃப்தார் பாக்ஸ் வரிசையாக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபத அவருடன் வந்த ஆட்சியாளர்களும் அங்கேயே அமர்ந்து மற்றவர்களை போலவே எளிமையான இஃப்தார் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு மக்களுடன் எளிமையாக இஃப்தார் விருந்தை முடித்த ஜனாதிபதி, பள்ளிவாசலுக்குள் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel