ADVERTISEMENT

UAE: அபராதத்தில் 35% தள்ளுபடி வழங்கும் அபுதாபி காவல்துறை..!! பயன்படுத்திக்கொள்ள குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு..!!

Published: 29 Apr 2024, 3:57 PM |
Updated: 29 Apr 2024, 3:58 PM |
Posted By: Menaka

அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், போக்குவரத்து அபராதங்களுக்கான தள்ளுபடி திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அபுதாபி காவல் துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாகன ஓட்டிகளுக்கு  அழைப்பு விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சி குறித்து காவல்துறையின் சமூக ஊடக சேனல்களில் பகிரப்பட்டுள்ள பதிவில், கடுமையான மீறல்களைத் தவிர, சில போக்குவரத்து விதிமீறல்களுக்கு மீறப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அபராதம் செலுத்தினால் 35 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும், மீறலுக்கு அபராதம் வழங்கப்பட்ட 60 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான நாட்களில் அபராதம் செலுத்தினால் 25 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இது தவிர, அபராதத் தொகையை வங்கிகள் மூலம் பூஜ்ஜிய வட்டியில் 12 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்துவதன் மூலமாகவும் பயன் பெறலாம் என்றும் அபுதாபி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சலுகை அபுதாபி போலீஸ் ஜெனரல் கமாண்டுடன் ஒப்பந்தம் செய்து, TAMM மூலம் பணம் செலுத்தும் சேவைகளை வழங்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுபோல, அபுதாபி காவல்துறை பகிர்ந்துள்ள மற்றொரு நினைவூட்டலில், பள்ளி பேருந்துகளின் பக்கவாட்டில் இருக்கும் ‘STOP’ அடையாளத்தைக் காண்பிக்கும் போது, இரு திசைகளிலும் முழு நிறுத்தம் செய்யுமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதை உறுதி செய்வதற்காக ஐந்து மீட்டருக்கு குறையாத இடைவெளியில் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றும், ஓட்டுநர்கள் நிறுத்தத் தவறினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 10 போக்குவரத்து புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அபுதாபி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel