ADVERTISEMENT

துபாயில் மது அருந்துதலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

Published: 21 Apr 2024, 3:34 PM |
Updated: 21 Apr 2024, 10:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அரபு நாடு என்பதால் இந்நாட்டின் உள்ளூர் சட்டம் மற்றும் நிர்வாகம் மற்ற நாடுகளில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும். அமீரக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதற்காக கடுமையான விதிகளும் சட்டங்களும் இங்கு நடைமுறையில் உள்ளன.

ADVERTISEMENT

அவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள அமீரகத்தில் மது அருந்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மதுபானம் அருந்துவது தடைசெய்யப்படவில்லை என்றாலும், நாட்டின் இஸ்லாமிய கலாச்சாரத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கு முன்னதாக துபாயில் மதுபானங்களை வாங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த ஆண்டான 2023 இல், துபாயில் மதுபானங்களை வாங்குவது தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டன மற்றும் மது பானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 சதவீத வரியும் நீக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு மதுபானங்கள் அமீரகத்தில் எளிதாக அணுகக்கூடியதாக மாறியுள்ளது. இருப்பினும், துபாயில் மது அருந்துவது தொடர்பாக என்னென்ன கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் அமலில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

துபாயில் மது அருந்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

1. துபாயில் மதுபானம் வாங்க அல்லது உட்கொள்ள, குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாக வேண்டும்.

ADVERTISEMENT

2. மதுபான உரிமம் உள்ள உணவகங்கள் அல்லது ஓய்வறைகளில் மட்டுமே குடிப்பதற்கு அனுமதிக்கப்படும்.

3. பொது இடங்களில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

4. உங்களிடம் ஆல்கஹால் உரிமம் இருந்தால் நீங்கள் தங்கியிருக்கும் வீடுகளிலோ அல்லது வசிக்கும் இடங்களிலோ மதுபானங்களை உட்கொள்ளலாம்.

5. அமீரகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது கடுமையான தண்டனைக்குரிய போக்குவரத்து குற்றமாகும். மீறுபவருக்கு அபராதம் விதிக்கப்படும், மேலும் 23 ப்ளாக் பாயின்ட்களுடன் உங்கள் வாகனம் 60 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.

ஆல்கஹால் உரிமம்:

துபாயில் மது வாங்குவதற்கு உரிமம் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது பதிவுசெய்யப்பட்ட மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்துவதற்கான உரிமத்தை இலவசமாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel