ADVERTISEMENT

UAE: இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாக 93% மக்கள் கருத்து..!! DCDயின் கணக்கெடுப்பில் வெளியான முடிவுகள்…!!

Published: 23 Apr 2024, 2:25 PM |
Updated: 23 Apr 2024, 2:25 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் சமூக மேம்பாட்டுத் துறையால் (DCD) மேற்கொள்ளப்பட்ட ‘Quality of Life’ என்கிற சமீபத்திய கணக்கெடுப்பின் படி, அபுதாபியில் உள்ள 93.6% குடியிருப்பாளர்கள் இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த கணக்கெடுப்பின் நான்காவது பதிப்பில், சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிடும் துறையின் நோக்கத்திற்கு இணங்க, 160 க்கும் மேற்பட்ட நாட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 92,576 தனிநபர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இத்தகைய கருத்துக்கணிப்பானது சமூகம் சாரந்த முக்கிய விஷயங்கள் மற்றும் அமீரகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் பற்றி, தனிநபர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறவும் இது அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

மேலும இந்த கணக்கெடுப்பில் வீட்டுவசதி, வேலை வாய்ப்புகள் மற்றும் வருவாய், குடும்ப வருமானம் மற்றும் செல்வம், வேலை-வாழ்க்கை சமநிலை, சுகாதாரம், கல்வி மற்றும் திறன்கள், தனிப்பட்ட பாதுகாப்பு, சமூக உறவுகள், குடிமக்கள் பங்கேற்பு மற்றும் நிர்வாகம், சுற்றுச்சூழல் தரம், சமூக மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு, சமூக சேவை, வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வு போன்றவையும் அடங்கும்.

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் திருப்தி விகிதமானது, இரவில் தனியாக நடக்கும்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளது மற்றும் அவர்கள் அபுதாபியில் பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலை அனுபவிப்பதைக் குறிக்கிறது.

ADVERTISEMENT

மேலும், சமூக உறவுகள் குறியீட்டில் சுமார் 75.4 சதவீதம் பங்கேற்பாளர்கள், தேவைப்படும்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களை நம்பியிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். சரியாக 73 சதவீத பங்கேற்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் செலவழித்த தரமான நேரத்தால் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.

மற்ற குறிகாட்டிகளில் பங்கேற்பாளர்களின் திருப்தி விகிதம்:

குடும்ப வருமானத்தில் திருப்தியைப் பொறுத்தவரை, பங்கேற்ற குடும்பத் தலைவர்களில் 34.3 சதவீதம் பேர் தங்கள் குடும்ப வருமானத்தில் திருப்தி அல்லது முழுமையான திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கூடுதலாக, 64.7 சதவிகிதம் ஊழியர்கள் தங்களது வேலையில் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், வாழ்க்கைத் தரத்தில் திருப்தியின் அளவு 10 என்ற அளவில் 6.94 புள்ளிகளையும், ஒட்டுமொத்தமாக, மக்கள்தொகைக்குள் மகிழ்ச்சி நிலை முந்தைய கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 7.63 புள்ளிகளில் இருந்து 7.69 புள்ளிகளையும் எட்டியுள்ளது.

DCDயின் இந்த கணக்கெடுப்பு 38 நாடுகளில் பயன்படுத்தப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக சேவைகளை மேம்படுத்துவதற்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் சமூக சவால்களை அடையாளம் காணவும் பகுப்பாய்வுகளை நடத்தவும் இந்த கணக்கெடுப்பை DCD பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel