ADVERTISEMENT

ஈத் விடுமுறையில் துபாயில் உள்ள பூங்காக்கள் செயல்படும் நேரங்களை வெளியிட்ட முனிசிபாலிட்டி!!

Published: 8 Apr 2024, 5:54 PM |
Updated: 8 Apr 2024, 9:05 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை கொண்டாடுவதற்காக நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் விடுமுறையை அனுபவிக்க பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் போன்ற சிறந்த வெளிப்புற இடங்களை தேடி வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஈத் விடுமுறையின் போது துபாய் எமிரேட்டில் உள்ள சில பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் பூங்கா செயல்படும் நேரத்தை துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடியிருப்பு பூங்காக்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சாகச அனுபவங்களைத் தேடுபவர்கள் ட்ரெக்கிங், பைக் மற்றும் ஹைகிங் செல்லலாம். இவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

ADVERTISEMENT

இவை தவிர, பின்வரும் பார்க்குகள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது:

  • ஜபீல் பார்க் (Zabeel Park)
  • அல் கோர் பார்க் (Al Khor Park)
  • மம்சார் பூங்கா (Mamzar Park)
  • அல் சஃபா பூங்கா (Al Safa Park)
  • முஷ்ரிஃப் பூங்கா (Mushrif Park)
  • தேசிய பூங்கா (National Park)

இதனிடையே, குரானிக் பார்க் (Quranic Park) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், மிராக்கிள் குகை (Miracle Cave) மற்றும் கிளாஸ் ஹவுஸ் (Glass House) காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் எமிரேட்டின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான துபாய் ஃப்ரேம் (Dubai Frame) ஈத் விடுமுறையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்களை வரவேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், ‘Children’s City’ திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel