ADVERTISEMENT

‘Habibi.. Come to Dubai’ துபாயை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. முதல் 3 மாதங்களில் மட்டும் 25,700 க்கும் மேல் அதிகரித்துள்ள மக்கள்தொகை…

Published: 7 Apr 2024, 12:43 PM |
Updated: 7 Apr 2024, 12:51 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் வலுவான பொருளாதார வளர்ச்சி, அதிகளவிலான வேலை வாய்ப்பு, வணிக வாய்ப்புகள், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளால் வெளிநாட்டினர் அமீரகத்தில் குடியேற விரும்புகின்றனர். இதன்விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் அமீரகத்தின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் துபாயில் குடியேறுவதால், 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் துபாயின் மக்கள்தொகை 25,700-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது வேகமான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக கூறப்பட்டுள்ளது.

துபாய் புள்ளியியல் மையத்தின் (Dubai Statistics Centre) தரவுகள், ஜனவரி-மார்ச் 2024 காலகட்டத்தில் மக்கள்தொகை 25,776 அதிகரித்து 3,680,785 ஆக இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மக்கள் தொகை 25,489 அதிகரித்திருந்தது. இது வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள் துபாயை நோக்கி வருவதை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஐக்கிய அமீரக அரசாங்கம் அறிவித்துள்ள சமீபத்திய குடியுரிமைத் திட்டங்கள், கோல்ட் மற்றும் சில்வர் விசா வகைகள் போன்றவை அமீரகத்தை தங்கள் வீடாக மாற்ற விரும்பும் வெளிநாட்டினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன என்றும், இது உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை அமீரகத்தை நோக்கி ஈர்க்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தின் இந்த அபரிமிதமான மக்கள் தொகை வளர்ச்சியானது நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாடகைக்கு விடப்படும் சொத்துகளுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2024 ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், ஆனால் இன்னும் உலக சராசரியை விட இது மிகக் குறைவாக இருக்கும் என்றும் UAE சென்ட்ரல் கணித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், கடந்த மூன்று வருடங்களாக மிக அதிகளவு வெளிநாட்டினர் வருகையைத் தொடர்ந்து இனி வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 6,900 புதிய குடியிருப்பாளர்கள் என்ற வீதம், ஜனவரி 2021 முதல் துபாயில் மக்கள்தொகை 269,300 அதிகரித்துள்ளதாக துபாய் புள்ளியியல் மையத்தின் தரவுகள் கூறுகின்றன.

நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி அதிக வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு தங்களது அலுவலகங்களை அமைக்க ஈர்க்கும் என்பதால், இனி வரும் ஆண்டுகளில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும், இது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் இதன் விளைவாக மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel