ADVERTISEMENT

வெறும் 7 திர்ஹம்ஸில் துபாய் மெரினாவை சுற்றிப் பார்க்க முடியுமா..?? RTA வழங்கும் சேவை பற்றிய விபரங்கள் இங்கே..!!

Published: 13 Apr 2024, 4:18 PM |
Updated: 13 Apr 2024, 4:24 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் அதிகளவு மக்கள் வசிக்கக்கூடிய நகரமான துபாயில் தனிநபர்கள் சொந்தமாக வாகனம் ஓட்டுவதை விட பெரும்பாலானோர் பொது போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து தாமதம், பார்க்கிங், வாகனத்திற்கான பெட்ரோல் இவற்றையெல்லாம் ஒப்பிடும் போது துபாய் மெட்ரோ, பஸ், டிராம் போன்றவை மலிவான போக்குவரத்தை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அதில் ஒன்றாக துபாய் வாட்டர் டாக்ஸியானது பயணிகளுக்கு வெறும் 7 திர்ஹம் செலவில் மறக்க முடியாத தருணங்களை வழங்குகின்றது.

ADVERTISEMENT

துபாய் மெரினாவில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) இயக்கப்படும் வாட்டர் டாக்ஸியில், துபாய் மெரினா சுற்றுப்புறத்தையும், நகரின் வானுயர் கட்டிடங்களையும் ரசித்தவாறே மக்கள் பயணம் செய்யலாம். மேலும் இது பயணிகளுக்கு கடற்பயணத்தில் புதுவித அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஈத் விடுமுறை காலத்தில் வாட்டர் டாக்ஸி உட்பட பல்வேறு பொதுப் போக்குவரத்து வசதிகளின் இயக்க நேரத்தை RTA நீட்டித்துள்ளது. அதில் வாட்டர் டாக்ஸி சேவை குறித்தான சில விபரங்களை கீழே காணலாம்

ADVERTISEMENT

வாட்டர் டாக்ஸி வழித்தடங்கள்:

  • மெரினா மால் – மெரினா வாக்
  • மெரினா ப்ரோமினேட் (Promenade) – மெரினா மால்
  • மெரினா வாக் – மெரினா டெரெஸ் (terrace)
  • துபாய் மெரினா மால் – ப்ளூவாட்டர்
  • முழு வழித்தடம் – மெரினா ப்ரோமினேட், மரைன் மால் 1, மெரினா வாக் முதல் மெரினா டெரஸ் வரை

கட்டணம்: ஒரு நிறுத்தத்திற்கு ஒரு நபருக்கு 7 திர்ஹம்ஸ் வசூல் செய்யப்படுகிறது. நீங்கள் முழு வழித்தடத்தையும் சுற்றிப்பார்க்க விரும்பினால், உங்கள் பயணத்தில் நீங்கள் எத்தனை நிறுத்தங்களைச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும்.

வாட்டர் டாக்ஸி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

ஈத் விடுமுறையை முன்னிட்டு, கணிசமான கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், சிரமங்களை தவிர்க்க RTAவின் அதிகாரப்பூர்வ இணையதளமான – http://rta.ae மூலம் உங்களுக்கான இடத்தை முன்கூட்டியே பதிவு செய்வது சிறந்தது. பின்வரும் எளிய படிகளைப் பின்பற்றி உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்:

ADVERTISEMENT
  1. RTA இன் கடல் போக்குவரத்து இணையதளத்தைப் பார்வையிடவும் – http://marine.rta.ae
  2. ‘Area’ என்ற வகையின் கீழ் ‘துபாய் மெரினா’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ‘வாட்டர் டாக்ஸி’யை உங்கள் போக்குவரத்து முறையாக தேர்வு செய்யவும்.
  4. நீங்கள் விரும்பும் வழியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும் நேரத்தைத் தேடுங்கள். பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஏதேனும் விருப்பத்தேர்வுகள் (டிக்கெட் வகுப்பு போன்றவை) தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் தொடர்பு விவரங்களை உள்ளிட்டு உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்தவும்.
  6. உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தியவுடன், டிஜிட்டல் டிக்கெட்டுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

ஈத் அல் ஃபித்ருக்கான வாட்டர் டாக்ஸி நேரங்கள்

  • மெரினா மால் முதல் புளூவாட்டர்ஸ் – மாலை 4.15 முதல் இரவு 11.25 வரை.
  • துபாய் மெரினா, மெரினா மாலில் இருந்து மெரினா வாக் வரை – மதியம் 12 முதல் இரவு 11.05 வரை.
  • மெரினா ப்ரோமினேட் முதல் மெரினா மால் வரை – மாலை 3.55 முதல் இரவு 10 மணி வரை.
  • மெரினா டெரெஸ் முதல் மெரினா வாக் வரை – மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை
  • முழு வழிப்பாதை – மாலை 3.55 முதல் இரவு 9.40 வரை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel