UAE: சாலையின் நடுவில் வாகனம் திடீரென்று பழுதடைந்து நின்றால் என்ன செய்வது?? ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய 8 பாதுகாப்பு குறிப்புகள்….
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன ஓட்டிகளுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிகளை மீறுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது அல்லது சாலையின் நடுவில் காரை நிறுத்துவது போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை சட்ட அமலாக்க அதிகாரிகள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
இருப்பினும், சாலையின் நடுவில் வாகனங்கள் திடீரென பழுதடைவது என்பது தவிர்க்க முடியாத பல சூழ்நிலைகளில் நிகழ்கின்றன. இவ்வாறு கார் பிஸியான சாலைகளில் திடீரென பழுதடையும் போது போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறது. அந்த சமயத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் விபத்தை எப்படி தடுப்பது என்பதையும் ஓட்டுநர்கள் அறிந்திருப்பது அவசியம்.
அதுமட்டுமில்லாமல், திடீர் செயலிழப்பைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் தங்கள் கார்களின் சரியான பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் சிரமத்தைத் தடுக்க வழக்கமான ப்ரி-டிரைவ் சோதனைகளை (pre-drive check) மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவ்வப்போது டயர்களின் சர்வீஸ் மற்றும் அவற்றின் சுகாதார சோதனைகளை புறக்கணிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சாலையின் நடுவில் திடீரென வாகனம் பழுதடைந்தால், உடனடியாக பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
- சாலையில் இருந்து விலகி, நியமிக்கப்பட்ட அவசரகாலப் பகுதிகளைப் பயன்படுத்தவும்.
- தீவிர தேவையின் போது மட்டுமே சாலையின் வலது ஓரத்தை பயன்படுத்த வேண்டும்.
- வாகனக் கோளாறு குறித்து பிற ஓட்டுனர்களை எச்சரிக்க, அபாய விளக்குகளை (hazard lights) உடனடியாக இயக்கவும்.
- உங்கள் பாதுகாப்பிற்காக வாகனத்தின் உள்ளே அல்லது சாலையில் நிற்பதை தவிர்க்கவும்.
- திடீரென வாகனம் நிற்பதற்கான சூழ்நிலை தெரிந்தால் உடனடியாக போக்குவரத்திலிருந்து விலகி, ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி பாதுகாப்பான தூரத்தில் நிற்கவும்.
- மற்ற ஓட்டுனர்களை எச்சரிக்க, ஸ்தம்பித்த வாகனத்தை மேலும் தெரியப்படுத்த, போதுமான தொலைவில் பிரதிபலிப்பு எச்சரிக்கை முக்கோணம் (reflective warning triangle) அல்லது பிற சிக்னலிங் சாதனங்களைப் பயன்படுத்தவும்.
- உங்களுக்கு தெரியாத பட்சத்தில் தானாகவே வாகனங்களை பழுதுபார்ப்பது போன்ற செயல்பாடுகளை சாலைகளில் மேற்கொள்வதை தவிர்க்கவும்
- உதவிக்கு 999 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைக்கவும்
ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி போக்குவரத்து சட்டங்களின்படி, சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தினால் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் ஆறு ப்ளாக் பாய்ன்ட்கள் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, உங்கள் காரை சரிசெய்ய முடியாத அளவுக்கு இது சேதப்படுத்தலாம் மற்றும் ஆபத்தானதாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஓட்டுநர்களின் கவனம் சாலையில் இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனத்தை பராமரிப்பது, எந்தவொரு வாகனக் கோளாறுகளையும் உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான்ன வாய்ப்பை உறுதி செய்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் கவனத்தை புறக்கணிப்பது போக்குவரத்து விபத்துக்களுக்கு வழிவகுக்கும், பெரும்பாலும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel