ADVERTISEMENT

குளோபல் வில்லேஜ் செயல்படும் நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ள நிர்வாகம்..!! ஈத் அல் ஃபித்ர் விடுமுறைக்காக அறிவிப்பு வெளியீடு….!!

Published: 8 Apr 2024, 10:29 AM |
Updated: 8 Apr 2024, 10:55 AM |
Posted By: Menaka

துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜ் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு செயல்படும் நேரங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாலை 6 மணி முதல் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்றும், ரமலான் மாதம் முடிந்ததும், அதன் வழக்கமான திறப்பு நேரமான மாலை 4 மணிக்குத் திரும்பும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது, ஈத் அல் ஃபித்ர் விடுமுறையைக் கொண்டாடும் குடியிருப்பாளர்களுக்காக ஈத் விடுமுறை நாட்களில் வழக்கமான திறப்பு நேரமான மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரை குளோபல் வில்லேஜ் செயல்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பார்வையாளர்கள் குளோபல் வில்லேஜில் பண்டிகைக் காலம் முழுவதும் இரவு 9 மணிக்கு வானத்தை அலங்கரிக்கும் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளை காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவை தவிர, அங்கு சுற்றிலும் பார்வையாளர்களை உற்சாகமூட்டும் 200க்கும் மேற்பட்ட கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, குளோபல் வில்லேஜின் நடப்பு சீசன் 28 எதிர்வரும் 28 அன்று முடிவடைய உள்ளது, ஆகவே பார்வையாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் ஈத் வொண்டர் சூக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அனுபவங்களைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அங்கு ஈத் பரிசுகள், நினைவுப் பொருட்கள், தொல்பொருட்கள் மற்றும் பல பாரம்பரிய கைவினைப் பொருட்ள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்கி மகிழலாம் என்றும் கூடுதலாக, குளோபல் வில்லேஜ் முழுவதும் உள்ள உணவு டிரக்குகள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றிலிருந்து சுவையான உணவுகளை ருசிக்கும் வாய்ப்பையும் அனுபவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel