ADVERTISEMENT

ஈத் விடுமுறைக்கு அமீரகத்தில் புதிதாக ஒரு இடத்தை சுற்றிப்பாரக்க ஆசையா.? கல்பாவை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Published: 10 Apr 2024, 11:58 AM |
Updated: 10 Apr 2024, 12:09 PM |
Posted By: Menaka

அமீரகக் குடியிருப்பாளர்களில் சிலர் ஈத் அல் பித்ர் பண்டிகைக்கான நீண்ட விடுமுறையை அனுபவிக்க விசா இல்லாத நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடும் அதேவேளையில், பெரும்பாலானோர் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியமான இடங்களையே சுற்றிப் பார்க்கத் தேர்வு செய்கிறார்கள்.

ADVERTISEMENT

அவ்வாறு நீங்களும் அமீரகத்திற்குள்ளேயே பிரபலமான சுற்றுலா இடத்தில் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற விரும்பினால், ஹஜர் மலைகள் மற்றும் கிழக்கு கடற்கரைக்கு இடையில் அமைந்துள்ள கல்பா நகரம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஷார்ஜாவில் உள்ள கல்பா, அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு மலையேற்றம், கயாக்கிங் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற உற்சாக சவாரிகளை உறுதியளிக்கிறது. அத்துடன் கல்பா நீர்வீழ்ச்சிகள் மற்றும் அல் ஹெஃபாயா ஏரி உள்ளிட்ட மிக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில சுற்றுலா தலங்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ற நடவடிக்கைகளை பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன.

ADVERTISEMENT

எப்படி செல்வது?

நீங்கள் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து பயணம் செய்தால், ஷார்ஜாவின் எக்ஸ்க்ளேவ், கிழக்குக் கடற்கரைக்குச் செல்ல வேண்டும். உங்கள் சாலைப் பயணத்தைத் தொடங்குவதற்கான எளிதான வழி, E102 நெடுஞ்சாலை (ஷார்ஜா-கல்பா சாலை) ஆகும். நீங்கள் பின்வரும்  மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளில் இருந்து அங்கு செல்லலாம்: E11 (ஷேக் சையத் சாலை), E311 (ஷேக் முகமது பின் சையத் சாலை) மற்றும் E611 ( எமிரேட்ஸ் சாலை).

ADVERTISEMENT
  • E11 இல், ஷார்ஜா சிட்டி சென்டரில் இருந்து S112 கிங் பைசல் தெருவை (King Faisal Street) நோக்கி வெளியேறவும், அது உங்களை E102 க்கு அழைத்துச் செல்லும்.
  • நீங்கள் E311 இல் இருந்தால், E102 இல் செல்ல இரு திசையிலிருந்தும் எக்ஸிட் 65 ஐப் பயன்படுத்தவும்.
  • நீங்கள் E611 இல் இருந்தால், E102 க்கு செல்ல ஷார்ஜா மசூதி இன்டர்சேஞ்ச்சிலிருந்து வெளியேறவும்.

நீங்கள் நெடுஞ்சாலையில் சென்றவுடன், கல்பாவை அடைய சுமார் ஒரு மணிநேரம் ஆகும். இந்த நகரம் ஷார்ஜா நகரிலிருந்து கிழக்கே 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

1. ஹேங்கிங் கார்டன்:

உங்கள் பாதையில் மலைப் பகுதிகளுக்குள் நுழைந்தவுடன், கல்பா சுரங்கப்பாதை வழியாகச் செல்வீர்கள். சுரங்கப்பாதையை அடுத்து, உங்கள் வலதுபுறத்தில் தொங்கும் தோட்டத்தைக் காணலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்பட்ட புதிய ஈர்ப்புகளில் ஒன்றான கல்பா தொங்கும் தோட்டத்தில், அற்புதமான நீர்வீழ்ச்சிகளும், அனைத்து திறன் நிலைகளுக்கும் ஏற்ற மலைத்தொடரின் ஹைக்கிங் பாதைகளும் உள்ளன.

சுமார் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 100,000 மரங்களைக் கொண்டுள்ள இந்த புதிய இடம் கடல் மட்டத்திலிருந்து 281 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் அங்குள்ள இலவச பார்க்கிங் இடத்தில் உங்கள் காரை நிறுத்தலாம். நீங்கள் தொங்கும் தோட்டத்தை கால்நடையாக ஆராயலாம் அல்லது அப்பகுதியைச் சுற்றிலும் அழகிய இரயில் சவாரி செய்யலாம்.

இது தவிர, தொங்கும் தோட்டத்தின் மேல் பகுதியில் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதற்காக பாரம்பரிய மரக் கட்டிடக்கலையால் கட்டப்பட்ட ஒரு உணவகமும் அமைந்துள்ளது.

2. அல் ஹெஃபாயா ஏரி:

மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஏரியைச் சுற்றிலும் சுமார் 3.17 கிலோமீட்டர் நீளத்திற்கு இரட்டை வழிச் சாலை அமைந்துள்ளது, மேலும் சுற்றுலாப் பயணிகள், அங்கு 620 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியுடன், நீர்நிலையின் அழகிய காட்சியைக் கண்டு மகிழலாம்.

அத்துடன் Al Hefaiyah ரெஸ்ட் ஹவுஸ் உள்ளது, அங்கிருந்து தொங்கும் தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் 8,500 சதுர மீட்டர் விளையாட்டுப் பகுதி மற்றும் பசுமையான இடம் போன்றவற்றையும் ரசிக்கலாம். மேலும், இந்த ஏரிக்கு அருகில் 11.7 கிமீ நீளம் கொண்ட மலைப் பாதையும், 495 வழிபாட்டாளர்கள் தங்கக்கூடிய அளவிற்கு ஒரு மசூதியும் உள்ளது.

3. அல் குர்ம் பாதுகாக்கப்பட்ட பகுதி:

அமைதியான அல் ஹெஃபாயா ஏரியை அடுத்து அல் குர்ம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உங்கள் வாகனத்தை நிறுத்துவீர்கள். மலைகளுக்குப் பிறகு, கடற்கரையையும் நீர்விளையாட்டுகளையும் ஆராய்வதற்கான சிறந்த இலக்கு இது. ‘கல்பா மாங்குரோவ்’ என்றும் அழைக்கப்படும் இந்த இயற்கை இருப்பு, E102 நெடுஞ்சாலை முடிவடையும் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

இங்கு நீங்கள் அழிந்துவரும் அரேபிய-காலர் கிங்ஃபிஷர்கள் சதுப்புநிலங்களுக்கு மேல் பறப்பதை இங்கே காணலாம் மற்றும் கயாக் அல்லது துடுப்புப் பலகையில் சுற்றுப்பயணம் செல்லலாம். மேலும், உங்களிடம் தொலைநோக்கி இருந்தால் தூரத்திலிருந்து வனவிலங்குகளைக் கண்டுபிடிக்கலாம்.

4. கல்பா கார்னிச் பூங்கா:

கல்பா சதுப்புநிலங்களுக்குப் பிறகு, கார்னிச் பூங்காவிற்குச் செல்லுங்கள், இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. குறிப்பாக, குடும்பங்களுக்கு ஒரு சிறந்த அனுபவங்களை உறுதியளிக்கும் இடமாகும். இங்கு ஜாகிங் பாதைகள் மற்றும் விளையாட்டுப் பகுதிகள், அத்துடன் குடும்ப பிக்னிக்குகளை ரசிக்க ஏற்ற நிழல்கள் கொண்ட இருக்கைகள் உள்ளன.

5. கல்பா பீச் கார்னிச் பூங்கா:

உங்கள் சாலைப் பயணத்தில் இறுதியாக, நீங்கள் கடற்கரைக்குச் செல்லலாம், இங்கும், பார்வையாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள பல வசதிகளை நீங்கள் அனுபவிக்க முடியும், இதில் ஜாகிங் செய்வதற்கான ரப்பர் டிராக், கடலைப் பார்த்தவாறு அமர நிழல் பெஞ்சுகள் மற்றும் ஓய்வு அறைகள் ஆகியவை அடங்கும். நீங்கள் கடற்கரையில் அமைந்துள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோர் கல்பா கோட்டையையும் இங்கு ஆராயலாம்.

இவை தவிர, வாதி அல் ஹெலோ (Wadi Al Helo) அல்லது ஸ்வீட் பள்ளத்தாக்கு (Sweet Valley) ஆகியவை உங்கள் பட்டியலில் நீங்கள் சேர்க்கக்கூடிய மற்ற இடங்கள் ஆகும், மேலும் நீங்கள் கல்பாவிற்கு அதிகாலையில் புறப்பட்டால் சிறந்த நடைபயணத்தையும் இங்கு மேற்கொள்ளலாம்.

கூடுதலாக, குழந்தைகளை அழைத்துச் செல்ல சிறந்த இடமான Al Hefaiyah மலை பாதுகாப்பு மையமும் (Al Hefaiyah Mountain Conservation Centre) உள்ளது. இது பாலைவன வாழ்விடத்திற்கு சொந்தமான பல்வேறு உயிரினங்களை வழங்குகிறது. இந்த மையம் E102 இல் அமைந்துள்ளது, மேலும் நீங்கள் அல் ஹெஃபாயா ஏரியிலிருந்து கீழே வாகனம் ஓட்டும்போது உங்கள் வலதுபுறத்தில் இந்த இடம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel