ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பு விசாவில் (Resident Visa) தங்கியிருப்பவர்கள் அவர்களது விசா வகையைப் பொறுத்து குறிப்பிட்ட காலத்திற்குள் விசாவை புதுப்பிக்க வேண்டும். ஒருவேளை குடியிருப்பு விசா காலாவதியாகிவிட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அவர்களுக்கு சலுகைக் காலம் வழங்கப்படுகின்றன.
அவ்வாறு உங்கள் குடியிருப்பு விசாவிற்கு வழங்கப்படும் சலுகைக் காலம் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், அதனை நீங்கள் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான (ICP) ஸ்மார்ட் சர்வீஸ் போர்டல் – https://smartservices.icp.gov.ae/. மூலம் சில நிமிடங்களில் ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம்.
சலுகை காலத்தை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
1. ICP ஸ்மார்ட் சேவைகள் இணையதளத்தைப் பார்வையிடவும் – https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/login
2. அடுத்தபடியாக, மெனுவில் உள்ள ‘Public Services’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘File Validity’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. பின்னர் கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் – ‘search by file number’ அல்லது ‘passport information’ மற்றும் ‘Residency’ வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
4. நீங்கள் பாஸ்போர்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட் எண் காலாவதி தேதி மற்றும் தேசியத்தை உள்ளிடவும். நீங்கள் கோப்பு எண்ணைத் தேர்வுசெய்தால், பின்வரும் விவரங்களில் ஒன்றை உள்ளிடவும்:
- எமிரேட்ஸ் ஐடி எண்
- எமிரேட்ஸ் ஒருங்கிணைந்த எண் (UID எண்)
- கோப்பு எண்
5. அதன் பிறகு, உங்கள் பிறந்த தேதி மற்றும் தேசியத்தை உள்ளிடவும்.
6. இறுதியாக, ‘I’m not a robot’ கேப்ட்சாவை டிக் செய்து, ‘Search’ பட்டனை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் திரையில் தோன்றும்.
அதேபோன்று, உங்களின் UAE குடியிருப்பு விசா ரத்துசெய்தல் படிவத்தைப் பெற்றவுடன், நீங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சரியான தேதியை அதிலும் பார்க்க முடியும். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை காலத்திற்குள் நீங்கள் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது புதிய குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஓவர் ஸ்டே அபராதம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேன்சல் செய்யப்பட்ட உங்கள் குடியிருப்பு விசாவின் சலுகை காலத்தை தாண்டி நீங்கள் தங்கும் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் 50 திர்ஹம்ஸ் வீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், இது அனைத்து வகையான விசாவில் உள்ள தனிநபர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel