அமீரக செய்திகள்

UAE: எமெர்ஜென்சி பாதையில் முந்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல்துறை வெளியிட்ட வீடியோ..!! 1,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை..!!

அமீரக சாலைகளில் தவறாக முந்திச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக காவல்துறையினர் சாலை விபத்து குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிசிடிவி காட்சிகளை வெளியிடுவார்கள்.

ஆனால், இந்த முறை திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் CGI அனிமேஷன் வடிவிலான விழிப்புணர்வு வீடியோவை அபுதாபி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ஒரு சிவப்பு நிற 4WD வாகனம் போக்குவரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாகனத்தை முந்திச் செல்வதைக் காணலாம்.

விபத்து நடந்த இடங்களில் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து செல்ல பயன்படுத்தும் எமெர்ஜென்சி பாதையை, வாகன ஓட்டிகள் முந்திச் செல்வதற்கு பயன்படுத்துவது கடுமையான குற்றம் என்றும், இது பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

பின்னர், ஒரு கட்டத்தில் வெள்ளை நிற SUV காரை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், கண்மூடித்தனமாக சாலையின் விளிம்புக்குச் செல்லவே அங்கே எமர்ஜென்சி காரணமாக சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாவதையும் வீடியோ காட்டுகிறது.

அமீரகத்தைப் பொருத்தவரையிலும் சாலை விளிம்பில் இருந்து முந்திச் செல்வது ஃபெடரல் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42ன் அடிப்படையில், 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயின்ட்களுக்கு வழிவகுக்கும் ஒரு பெரிய போக்குவரத்து விதி மீறல் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!