அமீரக செய்திகள்

அமீரக சாலைகளில் வெள்ளம் வடிந்து விட்டதா?? சாலை நிலைமைகள் குறித்த சமீபத்திய அப்டேட் இதோ!!

இந்த வார தொடக்கத்தில் அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளை தாக்கிய கனமழையால், வெள்ளம் சூழ்ந்த சாலைகள், விமானச் சேவை ரத்து, துபாய் மெட்ரோ உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகளில் இடையூறு, வாகனங்கள் சேதம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிப்பு என ஏராளமான தடங்கல்களால் குடியிருப்பாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒட்டு மொத்தத்தில், மோசமான மழைக்குப் பிறகு அமீரக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்று கூறலாம்.

மோசமான வானிலையின் அலை ஓய்ந்த பின்னரும், நாட்டில் உள்ள பல ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே தொலைதூரத்தில் வேலை செய்கின்றனர் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கிறார்கள்.

இதனிடையே, அதிகாரிகள் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து, முழுமையாக மீட்சியடைய 24 மணி நேரமும் பணிபுரிகிறார்கள். இந்நிலையில், சில குடியிருப்பாளர்கள் வெளியே செல்ல முயற்சிக்கின்றனர்.

ஆனால், இந்த சமயத்தில் அது எவ்வளவு பாதுகாப்பானது? எந்தெந்த சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது? போன்ற தகவல்களை அறிந்திருக்க வேண்டும். ஆகவே, தற்போதைய சாலை நிலைமைகளை தெரிந்து கொள்வது வெளியே செல்ல திட்டமிடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

சமீபத்திய சாலை நிலவரங்கள்:

RTA பின்வரும் சாலைகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல்

பின்வரும் சாலைகள் இப்போது போக்குவரத்துக்கு அணுகக்கூடியவை, இருப்பினும், சில நீர் தேக்கம் இன்னும் நீடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

  • ஷேக் சயீத் சாலை (துபாய் ஃபைனான்சியல் சென்டர் ரவுண்டானாவில் இருந்து இன்டர்செக்‌ஷன் 9 வரை இரு திசைகளிலும்)
  • விமான நிலைய சாலை (பகுதி) அல் கவானீஜ் ஸ்ட்ரீட்
  • அல்ஜீரியா ஸ்ட்ரீட்
  • ராஸ் அல் கோர் சாலை
  • துபாய் – அல் அய்ன் சாலை
  • ஓட் மேத்தா சாலை (ஓரளவு) எமிரேட்ஸ் சாலை (பகுதி – அல் குத்ரா சந்திப்பு)
  • ஜெபல் அலி – லெஹ்பாப் சாலை.
  • அல் யாலாயிஸ் ஸ்ட்ரீண் (ஷேக் சயீத் சாலையிலிருந்து ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் இன்டர்செக்‌ஷன் வரை (பகுதியளவு போக்குவரத்து)
  • ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் (எக்ஸ்போ ரோடு இன்டர்செக்‌ஷன் முதல் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் வரை)
  • அல் குத்ரா சாலை (Emirates Rd. இலிருந்து ஜெபல் அலி – Lehbab Rd வரை)
  • சைஹ் அல் சலீம் ஸ்ட்ரீட்
  • அல் அசாயல் ஸ்ட்ரீட்
  • அல் கைல் சாலை (கார்ன் அல் சப்கா தெருவிலிருந்து அல் முஸ்தக்பால் தெரு வரை)
  • ஜுமேரா ஸ்ட்ரீட்
  • அல் வாசல் சாலை
  • ஷேக் ரஷீத் சாலை
  • அல் நஹ்தா ஸ்ட்ரீட்
  • ஓமான் ஸ்ட்ரீட்

மாலை 5.36 மணி நிலவரப்படி, எஸ்திக்லால் ஸ்ட்ரீட் அபு ஷகரா பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது மற்றும் அப்பகுதி தடை செய்யப்பட்டுள்ளது.

மாலை 5.12 மணி நிலவரப்படி, ஷார்ஜாவில் உள்ள அல் கான் சிக்னலலில் வெள்ளம் தேங்கியுள்ளது மற்றும் போக்குவரத்து தடுக்கப்பட்டது

மாலை 5 மணி நிலவரப்படி, 20வது ஸ்ட்ரீட், அல் கூஸ், துபாய். அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து தடுக்கப்பட்டது.

மாலை 4.30 மணி நிலவரப்படி, ஹெஸ்ஸா ஸ்ட்ரீட், ரெம்ராம், துபாய், வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

மாலை 4.20 மணியளவில் அல் இத்திஹாத் (துபாய்- ஷார்ஜா) சாலை, தடைப்பட்டு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. சஹாரா மையம் மற்றும் அல் தவுன் நோக்கி வெளியேறும் பகுதியின் காட்சி:

மாலை 4.13 மணி நிலவரப்படி, தெரு 2, தி கிரீன்ஸ், துபாய், வெள்ளத்தில் மூழ்கிய காட்சி.

KT photo: Muskan B

மாலை 4.13 நிலவரப்படி, அல் ஃபுர்ஜான், துபாய், வெள்ளத்தில் மூழ்கியுள்ள புகைப்படம். மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள டிஸ்கவரி கார்டன்ஸ் பெவிலியன் மால் முழுவதும், அவென்யூ ரெசிடென்ஸ் 1ல் இருந்து காட்சிகள்

மாலை 4.07 நிலவரப்படி, மசகின் அல் ஃபுர்ஜான், துபாய், வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சிகள்.

மாலை 4.05 மணி நிலவரப்படி, துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் அருகே அல் பர்ஷா 1, வெள்ளத்தில் மூழ்கியது Icon De luxe ஹோட்டல் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தெருக்களின் காட்சி:

Photos: Natalia Ivantsova

மாலை 4.01 மணி நிலவரப்படி, கிங் அப்துல் அஜீஸ் ஸ்ட்ரீட், அபு ஷகாரா, ஷார்ஜாவில் வெள்ளம்

Photo: Fahmida Shernaz

மாலை 4 மணி நிலவரப்படி, முசாப் பின் ஒமைர் ஸ்ட்ரீட், அல் மஹத்தா, காசிமியா, ஷார்ஜாவில் வெள்ளம் சூழ்ந்த காட்சி.

Photos: Baba Lye

மாலை 4 மணி நிலவரப்படி, துபாயில் உள்ள மால் ஆஃப் தி எமிரேட்ஸ் அருகே அல் பர்ஷா 1, வெள்ளத்தில் மூழ்கியது சிட்டி மேக்ஸ் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள பில்டிங் அல் ஜாபரின் காட்சிகள்:

Photos: Natalia Ivantsova

பிற்பகல் 3.45 மணியளவில் கார்னிச் ஸ்ட்ரீட், அல் மஜாஸ் 1, ஷார்ஜா, வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. ஆனால் கடந்து செல்லக்கூடியது.

Photo: Mohammed Mateen Khan

பிற்பகல் 3.30 மணியளவில் கிங் பைசல் ஸ்ட்ரீட், ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

Photo: Adnan Dastagir

பிற்பகல் 3.20 மணியளவில், அல் நுத், அல் காசிமியா, வெள்ளத்தால் சூழ்ந்துள்ள காட்சி.

Photos: Maheen Masthan

பிற்பகல் 3.09 மணி நிலவரப்படி, DIFC சாலைகள், துபாய், வெள்ளம் வடிந்து தெளிவாக இருக்கும் காட்சி.

மதியம் 3 மணி நிலவரப்படி, என்எம்சி ரவுண்டானா எதிரில், டிஐபி 1, வெள்ளத்தில் மூழ்கியது

Photo: Lawrence Martis

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, அபு ஷகாரா, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி

Photo: Sim Stanley

மதியம் 2.46 மணி நிலவரப்படி, ஷார்ஜாவில் உள்ள அல் இத்திஹாத் சாலை, (சபீர் மால் அருகே சந்திப்பு) வெள்ளத்தில் மூழ்கிய காட்சி.

KT reader

பிற்பகல் 2.43 மணி நிலவரப்படி, ஷார்ஜாவின் கிங் பைசல் சாலை வெள்ளத்தில் மூழ்கிய பகுதி

Photo: Mohammad Ahmad

பிற்பகல் 2.37 மணி நிலவரப்படி, தெரு 8 , டிஸ்கவரி கார்டன்ஸ் (டிஸ்கவரி கார்டன் மெட்ரோ நிலையம் அருகில்) வெள்ளத்தில் ஸ்தம்பித்துள்ளது.

Photo: Preetesh Gohil

மதியம் 2.30 மணியளவில் துபாய் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பின்புறம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

பிற்பகல் 2.25 – 2.35:

Garhoud பாலம், துபாயில் தடையற்ற போக்குவரத்து

துபாயின் ஏர்போர்ட் ரோடு, தண்ணீர் தேங்காமல் சாலை தெளிவாக உள்ளது.

அல் நஹ்தா ஸ்ட்ரீட், துபாய் நோக்கிச் செல்லும் சந்திப்பு தடுக்கப்பட்டது

அல் முல்லா பிளாசாவுக்கு எதிரே உள்ள துபாய் போலீஸ் ஜெனரல் ஹெட்கார்டர்ஸ் முன் குறுகிய பகுதி வெள்ளத்தில் மூழ்கியது

பிற்பகல் 2.22 மணி நிலவரப்படி, ஷார்ஜா ரிங் ரோடு (அல் இத்திஹாத் சாலையை நோக்கி), வெள்ளம்

Photo: Sabah Firdose

பிற்பகல் 2:20 மணி நிலவரப்படி, அல் குசைஸ் மெட்ரோ நிலையம் எக்ஸிட் 2 அருகில், துபாய், வெள்ளத்தில் மூழ்கிய பகுதி

KT reader

பிற்பகல் 2.10 மணி நிலவரப்படி, அல் காசிமியா, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கிய பகுதி

Photo: Komal Padhiar

மதியம் 2 மணி மணி நிலவரப்படி, அல் கான் முதல் ஜமால் அப்துல் நாசர் செயின்ட், ஷார்ஜா, வெள்ளம் (அல் மஜாஸ் வாட்டர் பார்க் முன்புறம் அல் நூர் மசூதியை நோக்கிய சாலை தெளிவாகத் தெரிகிறது.)

Photo: Dhruv Vishal Saxena

மதியம் 2 மணி நிலவரப்படி, அல் ஃபுர்ஜன் வில்லாஸ் சமூகம், துபாய், வெள்ளத்தில் மூழ்கியது (இரு திசைகளிலும் பிரதான சாலை தடுக்கப்பட்டது)

Photos: Beno Saradzic

பிற்பகல் 1.51 மணி நிலவரப்படி, துபாய் தெற்கு (எமிரேட்ஸ் சாலையை நோக்கி உள்ள உள் சாலை, E611), வெள்ளம் (அழிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது)

Photo: Nirooban Vimalanthan

மதியம் 1.52 மணி நிலவரப்படி, ஷார்ஜாவில் அல் வாதா தபால் நிலையம் அருகே வெள்ளம்

KT photo: Samlal Sisupalan​​​​

பிற்பகல் 1.50 மணி நிலவரப்படி, முவைலா கமர்ஷியல், சஃபாரி மால் சாலை, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியது (நெடுஞ்சாலைக்கு அணுகல் இல்லை)

Photos: Radhika G

மதியம் 1.40 மணி நிலவரப்படி,  துபாய், மைதான் மற்றும் அல் கைல் (முஸ்தக்பில் தெருவில் இருந்து) செல்லும் அண்டர்பாஸ், போக்குவரத்துக்கு மூடப்பட்டது

KT photo: Mazhar Farooqui Sabir

மதியம் 1.35 மணி நிலவரப்படி, எஸ்திக்லால் தெரு, அபு ஷகாரா மற்றும் கிங் பைசல் சாலை, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

Photos: Athira P Balan

மதியம் 1.30 மணி நிலவரப்படி, அல் கான் செயின்ட், அல் தாவுன், ஷார்ஜா, வெள்ளம், தடுக்கப்பட்டது

Photo: Syeda Sidra

மதியம் 1.15 மணி நிலவரப்படி, அல் வஹ்தா தெரு (சிட்டி சென்டர் அருகில்), ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

மதியம் 12.49 மணி நிலவரப்படி, அல் குவோஸ் இண்டஸ்ட்ரியல் ஏரியா 3 (அல் மதீனா சூப்பர் மார்க்கெட் அருகில், அல் அசயேல் தெரு), வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

Photo: Umair Hussain

மதியம் 12.45 மணி நிலவரப்படி, ஷேக் சயீத் சாலை (SZR), துபாய், சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மதியம் 12.41 மணி நிலவரப்படி, சுஃப்யான் பின் சக்ர் செயின்ட், பு டானிக் பகுதி, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

Photo: Fiza Sham

மதியம் 12.40 மணி நிலவரப்படி, அல் கைல் ரோடு, துபாய், ஓரளவு வெள்ளத்தில் மூழ்கியது அல் பர்ஷா காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஹெஸ்ஸா பாலத்தின் ஒரு காட்சி:

மதியம் 12.35 மணி நிலவரப்படி, அல் புட்டினா, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியது (தீயணைப்பு நிலைய ரவுண்டானாவில் மணிக்கூண்டு நோக்கி)

Photo: Finto Antony

மதியம் 12.32 மணி நிலவரப்படி, ஷேக் சயீத் சாலை, துபாய் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது:சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது:

KT reader

மதியம் 12.17 மணி நிலவரப்படி, அல் இத்திஹாத் சாலை, ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி. (இவை கைவிடப்பட்ட கார்கள்)

KT photo: Shihab

மதியம் 12.15 மணி நிலவரப்படி, ரோலா, ஷார்ஜா, தெளிவானது

மதியம் 12 மணி நிலவரப்படி, அல் ஜஹ்ரா தெரு, மேசலூன் ஷார்ஜா, வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

Photo: Muhammad Waqas Khan

மதியம் 12 மணி நிலவரப்படி, ஷார்ஜாவின் கிங் அப்துல் அஜீஸ் தெரு வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

KT photo: M. Sajjad

காலை 11.51 மணி நிலவரப்படி, ஷார்ஜாவின் எஸ்திக்லால் மற்றும் அபுஷாகரா தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி அடைக்கப்பட்டன. (அல் வதாவுக்குச் செல்லும் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.)

KT photo: Muhammad Sajjad

காலை 11.43 மணி நிலவரப்படி, அட்நாக் எரிபொருள் நிலையம், துபாய் நோக்கி ஷார்ஜாவில் உள்ள அல் கான் மூடப்பட்டது

KT photo: Shihab

காலை 10.46 மணி நிலவரப்படி, 11 தெரு, அல் பர்ஷா 1, துபாய் (சாண்ட் டூன்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து ஒரு காட்சி)

Photo: Leinier

 

காலை 10.45 மணி நிலவரப்படி, ஷார்ஜாவை நோக்கிய அல் இத்திஹாத் சாலை மூடப்பட்டது

KT Photo: Shihab

காலை 9.45 மணி நிலவரப்படி, ஜெபல் அலி ஃப்ரீ சோன் (தெற்கு), துபாய், வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் காட்சி.

Photo: Candice Dsouza

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!