UAE: ஆன்லைனில் பொருளை விற்பனை செய்யும் குடியிருப்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் மோசடி..!! குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை..!!

நீங்கள் ஆன்லைனில் உங்கள் பொருளை விற்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால், உங்களிடம் பொருளை வாங்கிவிட்டு பணம் செலுத்தியதாகக் கூறி, போலி வங்கி ரசீதுகளை அனுப்பும் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள். இவ்வாறு ஆன்லைன் விற்பனையாளர்களை குறிவைக்கும் மோசடி குறித்து அபுதாபி காவல்துறை வெள்ளிக்கிழமை குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக சமூக ஊடகங்களில், ஆன்லைனில் ஒரு பொருளை விற்பனைக்கு வைத்திருக்கும் பாதிக்கப்பட்ட ஒருவரை கண்டுபிடித்தவுடன் மோசடி செய்பவரின் மோசடி தொடங்குகிறது என்று குற்றவியல் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் கர்னல் முஹம்மது அல் அமரி தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, இந்த மோசடிக்காரர்கள் வழக்கமாக பணம் எதுவும் செலுத்தாமல் பணத்தை அனுப்பியதாகக் கூறி போலி ரசீதுகளை அனுப்புவார்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களை மோசடி நபர்களிடம் ஒப்படைத்த பின்னரே ரசீது போலியானது மற்றும் பணம் அனுப்பப்படவில்லை என்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் கர்னல் அல் அமரி கூறியுள்ளார்.
ஆகவே, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் குடியிருப்பாளர்கள் பணம் வரவு வைக்கப்படும் வரை பொருட்களைக் கொடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடிகளை சந்திப்பவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அபுதாபி காவல்துறையின் அறிவுறுத்தலின் படி, குடியிருப்பாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 8002626 (AMAN2626) அல்லது SMS (2828) மூலமாகவோ அல்லது [email protected] ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம். மேலும், காவல்துறையின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டின் வழியாகவும் புகாரைப் பதிவு செய்யலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel