அமீரக செய்திகள்

அபுதாபியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘டார்க் ஸ்கை பாலிசி’.. அரசு மற்றும் தனியார் துறைக்கும் பொருந்தும்.. அப்படினா என்னனு தெரியுமா.?

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ‘டார்க் ஸ்கை பாலிசி’யின் கீழ் நகரில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள விளக்குகள் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது அதிகரித்து வரும் ஒளி மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான லைட்டிங் நடைமுறைகளின் ப்ளூப்ரிண்டை முன்வைக்கும் என்று எமிரேட்டின் முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) கூறியுள்ளது.

அதாவது, நகரம் முழுவதும் செயற்கை விளக்குகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அவற்றை தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இரவு வானத்தைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

அதன் படி, வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற தனியார் இடங்களில், உட்புற விளக்குகள் வெளியில் எவ்வளவு தூரம் பரவுகிறது என்பதைப் பார்க்க சோதனை செய்யப்படும் என்று அதிகாரம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வெளிப்புற விளக்குகள் இந்த கொள்கையின் வழிகாட்டுதல்களின் முதன்மை இலக்குகளில் ஒன்றாகும் என்றும், இது பொது மற்றும் தனியார் என இரண்டு துறைகளுக்கும் பொருந்தும் எனவும் அபுதாபி முனிசிபாலிட்டி கூறியுள்ளது. இருப்பினும், கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து DMTயின் செயல்பாட்டு விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் சேலம் அல் காபி (Salem Al Kaabi) பேசுகையில், “அபுதாபி டார்க் ஸ்கை கொள்கையானது, இரவு வானத்தின் அழகைப் போற்றும் மற்றும் பாதுகாக்கப்படும் எதிர்காலத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை உள்ளடக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நகர்ப்புற நிலப்பரப்பு மற்றும் வான அதிசயங்களுக்கு இடையில் ஒரு இணக்கமான சகவாழ்வை உருவாக்குவதன் மூலம், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் நோக்கில் உலகளாவிய இயக்கத்திற்கு பங்களிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

செயல்படுத்தல்:

அபுதாபியில் இந்த விழிப்புணர்வு இயக்கங்களுடன், ஒளி மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்த விதிமுறைகள் பொது கட்டிடங்கள், தெருக்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிக நிறுவனங்கள், திறந்த மற்றும் வளர்ச்சியடையாத இடங்கள், விவசாயம் மற்றும் தொழில்துறை பகுதிகள் மற்றும் பலவற்றில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அவற்றில் கவச விளக்குகள், வெளிப்புற மற்றும் முகப்பில் விளக்குகள், அத்துடன் இயக்கம்-செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு விளக்குகள் மற்றும் நள்ளிரவில் பாதுகாப்பற்ற விளக்குகளை ஒருங்கிணைத்து நிறுத்துதல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மீறல் கண்டறிந்தால் அதற்கேற்ப தங்கள் விளக்குகளை சரிசெய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பன்முக அணுகுமுறை

இன்டர்நேஷனல் டார்க் ஸ்கை அசோசியேஷனின் (International Dark Sky Association) உலகளாவிய முயற்சிகளுடன் இணைந்து, அதன் முதல் கொள்கையானது பன்முக அணுகுமுறையுடன் அபுதாபியில் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது, இதில் பின்வருவன அடங்கும்:

  • நிலையான விளக்கு அமைப்புகளை ஊக்குவித்தல்
  • இயற்கை சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாத்தல்
  • வானியல் துறையில் அறிவியல் ஆராய்ச்சியை ஆதரித்தல்
  • பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்
  • நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்

அதிகாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, குடியிருப்பாளர்கள் மற்றும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும், பொருந்தக்கூடிய கையேடுகள் மற்றும் கட்டிட தரத்தின் அமைப்பான Estidama Pear ஆகியவற்றுடன் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்குவது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!