ADVERTISEMENT

அபுதாபியில் உயிருள்ள கோழிகளை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் மூடல்..!! ADAFSA அதிரடி நடவடிக்கை..!!

Published: 21 May 2024, 8:24 PM |
Updated: 21 May 2024, 8:24 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இயங்கி வந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே, சேமிப்புப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட உணவுகளுடன் (Frozen foods) உயிருள்ள கோழிகளை விற்பனை செய்ததற்காக அந்த சூப்பர் மார்க்கெட்டை நிர்வாக ரீதியாக மூட அபுதாபி உணவு பாதுகாப்புத் துறையால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘High Quality Foodstuff Trading’ என்று பெயரிடப்பட்ட அந்த சூப்பர் மார்க்கெட் உணவுப் பாதுகாப்புத் தேவைகளை கடைபிடிக்கத் தவறியதன் காரணமாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தால் (ADAFSA) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ADAFSA அதன் X கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடையின் நடைமுறைகள் பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் கடை அதன் தவறைச் சரிசெய்யும் வரை மூடல் நடைமுறையில் இருக்கும் என்றும் ADAFSA எடுத்துரைத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த நிலைமையைச் சரிசெய்து, செயல்பாட்டைப் பயிற்சி செய்வதற்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்து, மீறலுக்கான காரணங்களை நீக்கிய பிறகு மீண்டும் மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட் தங்களின் செயல்பாட்டைத் தொடங்கலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆணையம் எந்தவொரு உணவு வசதியிலும் ஏதேனும் மீறல்கள் காணப்பட்டாலோ அல்லது உணவுப் பொருளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, அபுதாபி அரசின் கட்டணமில்லா எண்ணான 800555ஐத் தொடர்புகொண்டு புகாரளிக்குமாறு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel