ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் எமிரேட்டில் வசிக்கும் எகிப்திய வெளிநாட்டவர் ஒருவர், ஏடிஎம்மில் பணத்தை டெபிட் செய்வதற்காக சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்கே கண்டெடுத்த 1,49,000 திர்ஹம்ஸ் பணத்தை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, அஜ்மானில் வசித்து வரும் அப்தெல் ஃபத்தாஹ் மஹ்மூத் அப்தெல் ஃபத்தாஹ் (Abdel Fattah Mahmoud Abdel Fattah) என்கிற எகிப்திய வெளிநாட்டவர் ஏடிஎம்மிற்குச் சென்ற போது, அங்கு 149,000 திர்ஹம் வரையிலான பணம் ATM அறையின் கீழே கடப்பதை கண்டிருக்கிறார்.
இதனை கண்டதும், உடனடியாக அந்தத் தொகையை உரிமையாளரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேரடியாக காவல்நிலையம் சென்று அந்த பணத்தை ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, எகிப்திய நாட்டவரின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தைப் பாராட்டிய அதிகாரிகள் அவருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி அங்கீகரித்துள்ளனர்.
அஜ்மான் காவல்துறையின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட அப்தெல் ஃபத்தா தனது செயல் சமூக உறுப்பினர்களுக்கு தார்மீக கடமை என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய உன்னத செயலுக்காக அமீரகக் குடியிருப்பாளர்கள் கௌரவிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
அமீரகத்தில் பொது இடங்களில் தவறவிட்ட பணத்தைக் கண்டுபிடிப்பது முதல் இழந்த பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததற்காக டாக்ஸி ஓட்டுநர்கள் வெகுமதி பெறுவது வரை, நேர்மையான சமூக உறுப்பினர்கள் அவர்களின் நற்பண்புகளுக்காக அமீரக காவல்துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட பல நிகழ்வுகள் அமீரகத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel