UAE: ஆன்லைனில் தொந்தரவா..?? உங்களின் ப்ரைவேஸி மீறப்படுகிறதா..?? எங்கு, எப்படி புகாரளிப்பது..??
தற்போதைய காலத்தில் இணைய வழி தொழில்நுட்பம் உச்சத்தை எட்டி பல்வேறு சாதனைகளை புரிந்த போதிலும் அதற்கேற்றவாறு சில பிரச்சனைகளும் உருவெடுத்துள்ளன. குறிப்பாக சைபர்க்ரைம், மோசடி, தனியுரிமை மீறல் போன்ற இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் சில செயல்களால் மக்களில் சிலர் பாதிப்படைகின்றனர்.
இந்த வகையான குற்றங்களை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் புதிதாக சட்டங்கள் இயற்றிக்கொண்டு வரும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை மக்கள் இது பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அமீரக அரசாங்கம் ஆன்லைன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தனிநபர்களையும் நிறுவனங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களை இயற்றியுள்ளது.
நாட்டில் வதந்திகள் மற்றும் சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஃபெடரல் ஆணைச் சட்டம் எண் 34 ஜனவரி 2, 2022 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் ஹேக்கிங், தாக்குதல் அல்லது அரசாங்க தகவல் அமைப்புகள் மற்றும் தரவுகளை சேதப்படுத்துதல், தவறான தகவல்களை பரப்புதல் அல்லது நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் தகவல்களை வெளியிடுதல் போன்றவற்றிற்கு இணையதளம் அல்லது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான தண்டனைகள் மற்றும் அபராதங்களை பட்டியலிடுகிறது.
சட்டத்தில் உள்ள பிற இணைய குற்றங்கள்:
- தவறான தரவுகளை விநியோகிக்க ரோபோக்களை உருவாக்குதல் அல்லது மாற்றியமைத்தல்
- எலக்ட்ரானிக் ஆவணங்களை பொய்யாக்குதல்
- மற்றவர்களின் தனியுரிமையை மீறுதல்
- மருத்துவத் தரவுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் ரகசியக் குறியீடுகளை சேதப்படுத்துதல்
- இணைய வழியில் பிச்சையெடுத்தல்
- ஊடக உள்ளடக்க தரநிலைகளுடன் (media content standards) இணங்காத தகவல்களை வெளியிடுதல்
- சட்டவிரோத உள்ளடக்கத்தை உருவாக்குதல் (illegal content) மற்றும் அதை அகற்றுவதைத் தவிர்ப்பது
- மனித கடத்தலை ஊக்குவிப்பதற்காக இணையதளத்தை உருவாக்குதல் அல்லது நிர்வகித்தல்
- சட்டவிரோதமான நிதியை மாற்றுதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல்
- உரிமம் இல்லாமல் நிதி திரட்டுதல்
- மிரட்டல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல்
- பிறரை அவமதிப்பதும், அவதூறு செய்வதும்
- உரிமம் இல்லாமல் புள்ளியியல் ஆய்வுகளை நடத்துதல்
- உரிமம் இல்லாமல் ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்தல்
- ஒரு வெளிநாட்டு அல்லது மதத்தை புண்படுத்துதல்
- துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை ஊக்குவித்தல்
- நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரத் தகவல்.
மேற்கூறிய குற்றங்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனிநபர்களின் அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுப்பது, சேமிப்பது அல்லது பகிர்வது போன்ற செயல்கள் அவர்களின் தனியுரிமையை மீறுவதாகக் கருதப்படுகிறது, இந்த நடத்தைக்கு 500,000 திர்ஹம் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅத்துடன் மேற்கூறியது போன்ற சைபர் கிரைம்களை உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது 999 என்ற எண்ணிலோ அல்லது ஆன்லைன் சேனல்கள் மூலமாகவோ புகாரளிக்கலாம்.
ஆன்லைனில் எவ்வாறு புகாரளிப்பது?
பின்வரும் சேனல்கள் மூலம் இணையக் குற்றங்களைப் புகாரளிக்கலாம்:
- அமீரகத்தின் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘eCrimes platform’ மூலம் குற்றங்களை புகராளிக்கலாம். இது Google Play, App Store மற்றும் AppGallery இல் உள்ள MoI UAE அப்ளிகேஷனில் கிடைக்கிறது.
- இ-க்ரைம்- துபாய் போலீஸ் (Dubai Police) ஆப்
தனிநபர்கள் அல்லது சொத்துக்களை பாதிக்கும் சைபர் கிரைம்களைப் புகாரளிக்க இ-கிரைம் சுய சேவை (e-crime self service) பொதுமக்களை அனுமதிக்கிறது. குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, முடிந்தவரை தகவல்களை வழங்கலாம். துபாய் போலீஸ் செயலி மூலம் அறிக்கைகளை தாக்கல் செய்யலாம்.
- அமன் சேவை (Aman service) -அபுதாபி போலீஸ்
அபுதாபி காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ள அமான் சேவை, எமிரேட்டில் சமூக பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. ஆண்டு முழுவதும் 24/7 செயல்படும் இந்த பாதுகாப்பு சேவை, குற்றங்களைக் குறைப்பதற்கும் கண்டறிவதற்கும் பங்களிக்கும். அதுமட்டுமின்றி, இது அறிக்கை தாக்கல் செய்பவரின் அடையாளத்தின் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. (https://srv.adpolice.gov.ae/en/aman/pages/default.aspx)
இது தவிர, குடியிருப்பாளர்கள் அபுதாபி போலீஸ் இணையதளம் அல்லது ஆப் மூலமாகவும் இணைய குற்றத்தைப் புகாரளிக்கலாம். நீங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது, உங்கள் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் சம்பவத்தின் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கூடுதலாக, அதிகாரிகளின் விசாரணையில் உதவ முடிந்தவரை குற்றத்தைப் பற்றி விவரங்களை வழங்கவும்.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் பப்ளிக் பிராசிக்யூஷனால் தொடங்கப்பட்ட ‘My Safe Society’ ஆப்ஸ். இது ஐடியூன்ஸ் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.
- குழந்தைகள்/பெற்றோர்கள் பல வழிகளைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சகத்திற்கு சைபர் குற்றங்களைப் புகாரளிக்கலாம், இதில் ஹாட்லைன் (116111), ([email protected]) குழந்தைகள் பாதுகாப்புக்கான உள்துறை அமைச்சகத்தின் இணையதளம், (www.moi-cpc.gov.ae) மற்றும் மின்னஞ்சல் ஆகியவை அடங்கும்.ஹேமயாதி அப்ளிகேஷன் மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு, 999ஐ அழைக்கவும்.
- 80091 என்பது UAE டிஜிட்டல் வெல்பீயிங் சப்போர்ட் லைன் (அரபு மொழியில் உள்ள உள்ளடக்கம்), இது டிஜிட்டல் நல்வாழ்வு கவுன்சிலின் முதல் முயற்சியாகும். டிஜிட்டல் உலகில் நாம் எதிர்கொள்ளும் நடைமுறை தினசரி சூழ்நிலைகள் குறித்து குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களிடமிருந்து தொழில்முறை ஆலோசனைகளை இது வழங்குகிறது.
இணைய பாதுகாப்பிற்கான RZAM ஆப்:
RZAM ஆப் என்பது தீங்கிழைக்கும் இணையதளங்களைக் கண்டறியவும் தீங்கிழைக்கும் இணையதளங்களைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட ப்ளக்-இன்-பிரவுசர்(plug-in browser) ஆகும். இது Mozilla Firefox, Safari, Chrome மற்றும் Edge உள்ளிட்ட பல்வேறு ப்ரவுசர்களில் கிடைக்கின்றது.
இது இணையதளங்களின் இணைப்புகளை ஸ்கேன் செய்து, தீங்கிழைக்கும் வலைப்பக்கங்களை மதிப்பிடுகிறது. இது பாதுகாப்பற்ற பிரவுசிங் முகவரிகள் மற்றும் ஆன்லைன் ஃபிஷிங் தளங்களையும் கண்டுபிடிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel