ADVERTISEMENT

பெண் பயணிகளுக்காக சிறப்பு இருக்கை விருப்பத்தை அறிவித்துள்ள இண்டிகோ விமான நிறுவனம்!!!

Published: 30 May 2024, 4:41 PM |
Updated: 30 May 2024, 4:43 PM |
Posted By: Menaka

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான இண்டிகோ விமான நிறுவனம் தங்களின் விமானங்களில் பயணிக்கும் பெண்களுக்கான சிறப்பு இருக்கை விருப்பத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் சக பெண் பயணிகளுக்கு அடுத்ததாக தங்களுக்கான இருக்கையைத் தேர்ந்தெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியாவின் முதன்மையான விமான நிறுவனமான ஏர் இந்தியா கடந்த அக்டோபர் 2023இல் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் தாய்மார்களுக்கு இதேபோன்ற கொள்கையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தற்போது, இண்டிகோ விமான நிறுவனமும் பெண்களுக்கான சிறப்பு இருக்கை விருப்பத்தை அறிவித்துள்ளது. இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்களின் விமானங்களுடன் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பயண அனுபவத்தை மிகவும் வசதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

மேலும், “எங்களின் அனைத்து பயணிகளுக்கும் இணையற்ற பயண அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் இந்த புதிய அம்சம் அந்த இலக்கை அடைய நாங்கள் எடுத்து வரும் பல படிகளில் ஒன்றாகும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இது சந்தை ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், இந்த அம்சம் பெண் பயணிகள் முன்பதிவு செய்த இருக்கைகளின் தெரிவுநிலையை, இணைய செக்-இன் போது மட்டுமே வழங்குகிறது. இது குறிப்பாக பெண் பயணிகள் மற்றும் குடும்ப பயணிகளுக்கான முன்பதிவுகளின் ஒரு பகுதியாக PNR களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அமீரகத்தின் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT