ADVERTISEMENT

UAE: புதிய பெயரில் பல வசதிகளுடன் மறு திறப்புக்கு தயாராகும் லா மெர் பீச்..!! செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்….

Published: 22 May 2024, 11:38 AM |
Updated: 22 May 2024, 11:41 AM |
Posted By: Menaka

துபாயின் ஐகானிக் இடங்களில் ஒன்றான லா மெர் பீச் (La Mer beach) மூடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மறுதிறப்பிற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய J1 பீச் திட்டமானது இதற்கு முன்னிருந்த லா மெர் சவுத்திற்கு பதிலாக புதிதாக டெவலப்பர் மெரெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் (Merex Investment) மூலம் மாற்றப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ள ஜே1 பீச் திட்டம் செப்டம்பர் 2024 இல் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

துபாய் ஹோல்டிங் ரியல் எஸ்டேட்டின் ஒரு பகுதியாக மெராஸால் (Meraas) உருவாக்கப்பட்ட லா மெர் பீச், குறிப்பாக லா மெர் சவுத், நான்கு வருட செயல்பாட்டிற்குப் பிறகு 2022 இல் தற்காலிகமாக மூடப்பட்டது, இப்போது J1 கடற்கரையாக பல்வேறு வசதிகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த திட்டமானது 3 பீச் கிளப்புகள் மற்றும் 10 உரிமம் பெற்ற உணவகங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இது பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த கடற்கரை அமைப்பில் பரந்த அளவிலான உணவு மற்றும் ஓய்வு விருப்பங்களை உறுதியளிக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து மெரெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டின் CEO ஷஹ்ராம் ஷம்ஸீ என்பவர் பேசுகையில், “எங்களிடம் பாலி மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து தேர்வு செய்ய 15 முதல் 20 கடற்கரை கிளப்புகள் இருந்தன, எனவே அந்தந்த சந்தைகளில் அவற்றின் வெற்றி மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் நாங்கள் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஒன்றை வழங்குவதே எங்கள் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவரது கூற்றுப்படி, J1 பீச்சில் உள்ள பீச் கிளப்புகள், துபாயில் உள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.

J1 பீச்சில் இத்தாலிய நேர்த்தியுடன் Gigi Rigolatto, கிரேக்க நேர்த்தியுடன் GAIA வழங்கும் Sirene Beach மற்றும் பிரெஞ்சு மற்றும் கிழக்கு ஆசிய நேர்த்தியுடன் அடங்கிய Bâoli என 3 வகையான பீச் கிளப்புகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அங்கு பார்வையாளர்கள் ஒரு முழு நாள் கடற்கரை அனுபவத்தைப் பெறலாம், உணவருந்தும் விருப்பங்களுடன் கூடுதலாக, விருந்தினர்களுக்கு மறக்க முடியாத தருணத்தை உறுதி செய்ய நேரலை பொழுதுபோக்கு முதல் நீச்சல் குளங்கள் என J1 பீச் ஒவ்வொரு விருப்பத்தையும் பூர்த்தி செய்வதாக உறுதியளிக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய ஆடம்பர திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக J1 கடற்கரையை உருவாக்குவதே மெரெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டின் நோக்கம் என்றும் ஷம்ஸீ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel